இந்திய அணியுடன் இணைந்த தோனி.. மகிழ்ச்சியில் இளம் வீரர்கள்.. பிசிசிஐயின் "அப்படி போடு" திட்டம்
லண்டன்: இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களுடன் தோனி இணைந்த சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் தற்போது டி20, ஒருநாள் போட்டிய்ல இந்திய அணி விளையாடி வருகிறது. அப்போது தோனி தனது குடும்பத்துடன் பிறந்தநாளுக்கு இங்கிலாந்து சென்று கொண்டாடினார்.
இந்த நிலையில், இந்திய அணியின் டிரெஸிங் ரூம்க்கு தோனி வந்து, வீரர்களுடன் உரையாடினார்.

ஆலோசகர் தோனி
இதனால், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக தோனியை , இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் படி பிசிசிஐ கேட்டு கொண்டது, தற்போது அதே போல் ஒரு திட்டத்தை பிசிசிஐ மேற்கொண்டு உள்ளதோ என்ற ரசிகர்கள் எதிர்பார்த்தனர்,

ரவி சாஸ்த்ரி டிவிட்
இதற்கு தகுந்தார் போல் ரவி சாஸ்த்ரி தோனியுடன் இணைந்து இருப்பது போல் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில், தோனியை மாஸ்ட்ரோ என்று பாராட்டிய ரவி சாஸ்த்ரி, அவரை சந்தித்து மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், தோனி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் சாஸ்த்ரி பாராட்டினார்.

வாய்ப்பு இல்லை
தோனியின் உடல் தகுதியை பற்றி ரவி சாஸ்த்ரி பேசியதும், அவர் திரும்ப வரப்போராறோ என சிலர் பதிவிட்டனர், ஆனால் ஒரு சிலர் தோனியை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக பிசிசிஐ நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அப்படி ஒரு பொறுப்பு தற்போதைய சூழலில் தேவையில்லை என்பதால், அதற்கு வாய்ப்பு இல்லை.

பிசிசிஐ முடிவு
எனினும் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரடனகள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இதனால் தோனியை இந்திய வீரர்கள் சந்தித்து பேசினால், கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என பிசிசிஐ தான், அவருக்கு வீரர்கள் அறைக்கு வெல்ல சிறப்பு அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படியே எதாவது ஒரு போஸ்ட் போட்டு கொடுத்தா நல்லா இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications