Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் முடிவே இப்படியா??.. புதிய தேர்வுக்குழுவுக்கு பிசிசிஐ விதித்த நிபந்தனை.. ஷாக் ஆன ரசிகர்கள்!

மும்பை: புதிதாக பொறுப்பேற்கவுள்ள இந்திய அணி தேர்வாளர் குழுவுக்கு முதல் பணியையே அதிரடி விஷயமாக கொடுத்துள்ளது பிசிசிஐ.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதி சுற்றில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அதுவும் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

இதனையடுத்து இந்திய அணியின் தோவ்விக்கான காரணங்களாக பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வந்தன.

தேர்வுக்குழு நீக்கம்

தேர்வுக்குழு நீக்கம்

இந்த விமர்சனங்களை அடுத்து பிசிசிஐ அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வாளர் குழுவை முற்றிலுமாக நீக்கியது. மேலும் புதிய தேர்வாளர் குழுவுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தகுதிகள்

தகுதிகள்

இந்த பதவிக்கு விண்ணப்பிபோர் குறைந்தது 7 டெஸ்ட் போட்டிகள், 30 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். ஓய்வு பெற்று குறைந்தது 5 வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும். இதே போல இந்தியாவில் வேறு எந்த கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக இருக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

முதல் முடிவே அதிரடி

முதல் முடிவே அதிரடி

இந்நிலையில் புதிதாக வரும் தேர்வுக்குழுவுக்கு முதல் முடிவே அதிரடியாக உள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட்டில் 3 வடிவ அணிக்கும் தனி தனி கேப்டன்களை முதலில் நியமிக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு என கூறியுள்ளனர். ரோகித் சர்மாவுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது. எனவே அயல்நாடுகளில் உள்ளது போன்று தனி தனி கேப்டன்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

டெஸ்ட் கேப்டன் யார்?

டெஸ்ட் கேப்டன் யார்?

இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நீடிக்கவுள்ளார். டி20 கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருப்பார் எனத் தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நிலைமை தான் என்னவென்பது குறித்து புதிய குழு முடிவெடுக்கவுள்ளது.

Story first published: Saturday, November 19, 2022, 13:28 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+