Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டம் க்ளோஸ்.. பும்ரா விவகாரத்தில் பிசிசிஐ ஆடிய கபட நாடகம்.. உண்மை தகவல் வெளியானது??

மும்பை: இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் விவகாரத்தில் பிசிசிஐ மறைத்து வைத்திருந்த உண்மை கசிந்தது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவுள்ளது.

பும்ராவின் காயம்

பும்ராவின் காயம்

அனைத்து ஏற்பாடுகளும் கடைசி கட்டத்தை எட்டிய சூழலில் தான் அணியில் மாற்றம் மேற்கொள்ளவுள்ளனர் என்ற தகவல் கசிந்தது. அதாவது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து விலகவுள்ளார் எனவும் தகவல் வெளியானது. மேலும் மாற்று வீரர்கள் குறித்தும் விவாதங்கள் தொடங்கின.

பிசிசிஐ-ன் செயல்

பிசிசிஐ-ன் செயல்

எனினும் பிசிசிஐ இதனை முற்றிலும் மறுத்தது. பும்ராவுக்கு முறிவு எதுவும் ஏற்படவில்லை, சாதாரண காயம் தான் என்றும், 4 - 5 வாரங்களில் சரியாகிவிடுவார் என்றும் கூறியது. மேலும் அவர் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகவில்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியே கூறியிருந்தார்.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

இந்நிலையில் இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி பிரச்சினை பெரிதாக உள்ளதால் அவரை டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றுகிறோம். மருத்துவர்களின் நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

பிசிசிஐ-ன் இந்த செயலால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ஏதேனும் ஒரு பிரச்சினையின் உண்மை தன்மை வெளியே வந்தாலும் கூட பிசிசிஐ எப்போதுமே மூடி மறைக்கவே பார்க்கிறது. இது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்லதா??, ஒரு வீரருக்கு காயம் என தெரிந்தவுடன் மாற்றாமல், கடைசி நேரத்தில் மாற்று வீரரை தேடுவதா? என விளாசி வருகின்றனர். குறிப்பாக பும்ராவுக்கு ஒன்றும் இல்லை எனக் கூறிய கங்குலியை விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, October 4, 2022, 11:54 [IST]
Other articles published on Oct 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+