Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புது மாப்பிள்ளை கோஹ்லிக்கு பிசிசிஐ கொடுத்த பரிசு.. கிரிக்கெட் உலகிலேயே அதிக சம்பளம் இவருக்குத்தான்!

டெல்லி: இந்திய வீரர் கோஹ்லி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி அளிக்கும்படி பிசிசிஐ அமைப்பிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்காக முறைப்படி பிசிசிஐ கூட்டங்களில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் கோஹ்லியின் சம்பளம் அதிகபட்சமாக 8 கோடி வரை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. இதனால் இந்திய அணியில் கோஹ்லிக்குத்தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் பிசிசிஐ, கிரிக்கெட் உலகிலேயே இனி கோஹ்லிக்குத்தான் அதிக சம்பளம் என்று ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. அவர் சம்பளத்தை மொத்தமாக பல மடங்கிற்கு உயர்த்தி உள்ளது.

கோஹ்லி வைத்த கோரிக்கை

கோஹ்லி வைத்த கோரிக்கை

இந்த கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதாக கோஹ்லி குற்றச்சாட்டு வைத்து இருந்தார். மற்ற நாட்டு வீரர்களை விட நாங்கள் அதிக போட்டி விளையாடுகிறோம் ஆனால் சம்பளம் குறைவாக இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு முன்னாள் வீரர்கள், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டோணி ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

சம்பளம் உயர்த்தப்படும்

சம்பளம் உயர்த்தப்படும்

பிசிசிஐ நடத்திய கூட்டத்தில் சில வாரம் முன்பு இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்களின் சம்பளம் வருடத்திற்கு 8 கோடி வரை உயர்த்தப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் தற்போது 2 கோடி வரை சம்பளம் வாங்கும் வீரர்கள் இனி 5 கோடி வரை சம்பளம் வாங்குவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு 6 லட்சமும் வழங்கப்படுவது இரட்டிப்பாக்கப்படும் என்று முடிவானது.

கோஹ்லிக்கு சர்ப்ரைஸ்

கோஹ்லிக்கு சர்ப்ரைஸ்

தற்போது கோஹ்லிக்கு புதிய சர்ப்ரைஸ் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5 கோடி சம்பளம் வாங்கும் அவருக்கு 7 கோடி வரை சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மொத்தமாக சம்பளம் இரட்டை மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி கோஹ்லி வருடத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குவார். கோஹ்லிக்கு அடுத்தபடியாக டோணி 8 கோடி வாங்கவார்.

கோஹ்லி நம்பர் 1

கோஹ்லி நம்பர் 1

இந்திய கிரிக்கெட் உலகில் இதுவரை யாருக்கும் இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டதே இல்லை. இதுவரை கிரிக்கெட் உலகில் அதிக சம்பளம் வாங்கிய வீரர்களின் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டிவ் ஸ்மித் 9 கோடியுடன் முதல் இடத்தில் இருந்தார். தற்போது கோஹ்லி அவரைவிட ஒரு கோடி அதிகமாக வாங்கி முதல் இடம் பிடித்து இருக்கிறார்.

Story first published: Friday, December 15, 2017, 13:52 [IST]
Other articles published on Dec 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+