“எதுவுமே இல்லாமல் எப்படி?” வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பிசிசிஐ தந்த ஷாக்.. ரிஸ்க் எடுக்க தயாரான ரோகித்
மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது
இந்தியாவுக்கு அடுத்தமாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளும் மோதும் இந்த தொடர் வரும் பிப்ரவரி 6ம் தேதி தொடங்கி பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு
இதற்கான இந்திய அணி நேற்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய அணியின் பவுலிங்கில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் ஓய்வுக்கு சென்றுள்ளனார். சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா என இருவருமே காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். மாற்று வீரர்களாக யுவேந்திர சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் மட்டுமே அனுபவ வீரர்களாக உள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள்
டி20 அணியின் வேகப்பந்துவீச்சில் இளம் வீரர்களான தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல் என முற்றிலும் இளம் வீரர்களே உள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக புவனேஷ்வர் குமார் ஒரு சீனியர் மட்டுமே உள்ளார். ஒருநாள் தொடரில் புவனேஷ்வர் குமாரும் இல்லாமல் முழுவதுமாகவே அனுபவம் இல்லாத வீரர்கள் உள்ளனர்.

சுழற்பந்துவீச்சு
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவி பிஷ்னாய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்னர். சற்றும் ஆறுதல் தரும்படி யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இந்த அணியின் சீனியர்களாக இடம்பெற்றுள்ளனர். டி20 அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் அணிக்கு திரும்புகிறார். இதனால் ஸ்பின்னர்கள் படை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
Recommended Video

ஏன் ரிஸ்க்?
முன்னணி பவுலர்கள் இல்லாமல் ரோகித் சர்மா 2 தொடர்களையும் கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களை வைத்து வெற்றி பெற்ற அனுபவம் ரோகித் சர்மாவுக்கு உள்ளது. எனவே ரோகித் மீது முழு நம்பிக்கையை வைத்து பிசிசிஐ ரிஸ்க் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications