சிறிது நேரத்திற்கு இப்படியா??.. ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம்.. உடல்நிலை குறித்து புது அப்டேட்!
அடிலெய்ட்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி சுற்றுகள் நாளை முதல் ( நவம்பர் 9) தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

தீவிர வலைபயிற்சி
இந்த போட்டிக்காக அடிலெய்டிற்கு சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணியுடனான போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி கண்டது. எனவே இந்த முறை தவறுகளை சரிசெய்துக்கொண்டு இங்கிலாந்தை வீழ்த்த முணைப்புடன் உள்ளனர்.

ரோகித் காயம்
இப்படிபட்ட சூழலில் தான் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக அதிர்ச்சி செய்தி வெளியானது. த்ரோ டவுன் பயிற்சியின் போது ரோகித்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வலியால் துடித்த அவருக்கு பிசியோதெரபிஸ்ட்கள் சிகிச்சை கொடுத்து அழைத்து சென்றனர். இன்னும் 2 நாட்களில் போட்டி உள்ள போது ரோகித்திற்கு காயமானதால் ரசிகர்களும் பதற்றத்தில் உள்ளனர்.

உடல்நிலை அப்டேட்
இந்நிலையில் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ்பேக் வைத்ததாகவும், அதன்பின்னர் அவர் எவ்வித பிரச்சினையும் இன்றி குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சற்று நேரத்திலேயே ரோகித் சர்மா வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டார்.

ரசிகர்களின் கவலை
ரோகித் சர்மாவின் ஃபார்ம் தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதுவரை ஆடிய 5 இன்னிங்ஸ்களில் வெறும் 89 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். இதில் ஒரு அரை சதம் போக, மற்ற அனைத்து போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். எனவே அவரின் கம்பேக்கும் அரையிறுதிப்போட்டிக்கு முக்கியமாகும்.


Click it and Unblock the Notifications