Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டா ஐபிஎல்ல நடத்தறதுக்கு பிசிசிஐக்கு உரிமையிருக்கு -ஹோல்டிங்

டெல்லி : ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு உரிமையுள்ளதாக முன்னாள் மேற்கிந்திய பௌலர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

T20 World Cup நடக்காவிட்டால் ஐபிஎல் நடத்தலாம் - மைக்கேல் ஹோல்டிங்

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடரை ஒத்திவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நாளை மறுதினம் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டே டி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட உள்ளதாகவும் ஐபிஎல்லுக்காக அந்த தொடர் ஒத்திவைக்கப்பட வில்லை என்றும் ஹோல்டிங் கூறியுள்ளார்.

 ஐபிஎல்லை நடத்த உரிமை

ஐபிஎல்லை நடத்த உரிமை

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐக்கு உரிமை உள்ளதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

 டி20 உலக கோப்பை நடத்துவதில் சிக்கல்

டி20 உலக கோப்பை நடத்துவதில் சிக்கல்

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடர் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டி20 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022க்கு ஒத்திவைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 டி20 உலக கோப்பையை தள்ளிவைக்க முடிவு

டி20 உலக கோப்பையை தள்ளிவைக்க முடிவு

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்டதாலேயே டி20 உலக கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முடிவை ஐசிசி மேற்கொண்டுள்ளதாகவும், ஐபிஎல் போட்டிகளை நடத்த இடமேற்படுத்திக் கொடுக்கும் நோக்கம் இதில் வெளிப்படவில்லை என்றும் மைக்கேல் ஹோல்டிங் மேலும் கூறியுள்ளார்.

 எந்த பாதிப்பும் இருக்காது

எந்த பாதிப்பும் இருக்காது

தொடர்ந்து பேசிய ஹோல்டிங், பந்துகளை ஷைன் செய்ய எச்சில் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். இந்த புதிய விதிக்கு வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்றும் எச்சிலுக்கு பதிலாக வியர்வையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், பந்து ஷைன் ஆவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, June 9, 2020, 2:57 [IST]
Other articles published on Jun 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+