Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CT 2025: துபாய்க்கு கிளம்பிய அனுஷ்கா சர்மா, ரித்திகா.. கோபமான கம்பீர்..சாட்டையை எடுத்த பிசிசிஐ

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பங்கு பெற இந்திய அணி வரும் 15ஆம் தேதி துபாய் புறப்பட்டு செல்கின்றது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த இந்திய அணி துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுகிறது.

இதில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடக்கும். ஒரு வேலை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அது துபாய்க்கு மாற்றப்படும். இல்லையென்றால் பாகிஸ்தானில் நடக்கும்.

cricket champions trophy virat kohli rohit sharma bcci

இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் பிசிசிஐ இருக்கிறது. காரணம் டி20யில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றாலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதி போட்டி வரை வந்து கோட்டை விட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியா தொடரில் பெரும் அவமானங்களை சந்தித்ததால் இம்முறை சாம்பியன்ஸ் கோப்பை வென்று ரசிகர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று முயற்சியில் இருக்கின்றனர்.

இந்த சூழலில் இந்திய அணி வீரர்களுடன் அவர்களுடைய மனைவி வந்து தங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் துபாயில் நடைபெறுவதால், ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் மனைவியும் துபாய்க்கு புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 3 வாரம்தான் நடைபெறும்.

அதிலும் மூன்று லீக் ஆட்டத்தில் இந்தியா மூன்றிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாக இன்று தொடர் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். எதற்கு வீரர்கள் ஒவ்வொருவரும் 100% கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த சூழலில் துபாய்க்கு மனைவிகளுடன் கிரிக்கெட் வீரர்கள் வந்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கம்பீர் முடிவெடுத்திருக்கிறார்.

பிசிசிஐயின் புதிய விதிப்படி இந்திய அணி வீரர்களின் மனைவி ஒரு வாரம் வரை துபாய் வந்து தங்கலாம். ஆனால் முதல் வாரத்திலேயே இந்தியா இரண்டு லீக் போட்டிகளில் விளையாடுகிறது. அந்த இரண்டிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும். இதனால் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் இந்த தொடருக்கு வரக்கூடாது என கம்பீர் பிசிசிஐயிடம் தெரிவித்திருக்கிறார்.இதனால் பிசிசிஐயும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு மனைவிகளை அழைத்துச் செல்லக்கூடாது என வீரர்களிடம் கராராக கூறி இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Thursday, February 13, 2025, 23:22 [IST]
Other articles published on Feb 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+