For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டி ஐபிஎல்-பிசிசிஐ 2வது நோட்டீசுக்கும் லலித் மோடி விளக்கம்

By Chakra
Lalit Modi
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னிடம் விளக்கம் கேட்டு அனுப்பிய 2வது நோட்டீஸுக்கு நேற்று இரவு இ-மெயில் மூலம் பதில் அனுப்பியுள்ளார் லலித் மோடி என அவரது வக்கீல் மகமூத் அப்தி கூறியுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎல் ஆணையர் லலித் மோடிக்கு கிரிக்கெட் வாரியம் 2 விளக்கம் கோரும் நோட்டீஸ்களை அனுப்பியது. அதில் முதல் நோட்டீஸுக்கு சமீபத்தில் மிக விரிவான விளக்கம் அளித்திருந்தார் மோடி. இந்த நிலையில் 2வது நோட்டீஸுக்கு நேற்று இமெயில் மூலம் விளக்கத்தை அனுப்பியுள்ளார் மோடி.

இதுகுறித்து அவரது வக்கீல் அப்தி கூறுகையில், நேற்று இரவு மோடி தனது விளக்கத்தை இமெயில் மூலம் அனுப்பி விட்டார். செவ்வாய்க்கிழமை இதன் எழுத்துமூலமான விளக்கத்தை, 24 பக்கங்கள் கொண்டது, நேரடியாக சமர்ப்பிக்கிறார் மோடி என்றார் அப்தி.

இங்கிலாந்தில் போட்டி ஐபிஎல் அமைப்பை உருவாக்கி போட்டிகளை நடத்த முயன்றது குறித்து தனது 2வது நோட்டீஸில் விளக்கம் கேட்டிருந்தது கிரிக்கெட் வாரியம். இதற்குத்தான் தற்போது விளக்கம் அளித்துள்ளார் மோடி.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் கைல்ஸ் கிளார்க் அனுப்பிய இ மெயில் தகவலின் அடிப்படையில் மோடியிடம் விளக்கம் கேட்டு மே 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது கிரிக்கெட் வாரியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+