Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரர்கள்.. கேஎல் ராகுலுக்கு இனி இடமில்லை.. தேர்வுக்குழு அதிரடி முடிவு

மும்பை : டி20 உலககோப்பையில் இந்திய அணி தோல்வி தழுவியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோகித் சர்மா தான்.

இதனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் புதிய தொடக்க வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளது.

அதன் படி, அதற்கான தொடக்க புள்ளியை வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்து தொடரிலேயே பிசிசிஐ போட உள்ளது.

கேஎல் ராகுலுக்கு இடமில்லை

கேஎல் ராகுலுக்கு இடமில்லை

அடுத்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை நடைபெறுகிறது. இதனால் சீனியர் வீரர்கள் டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை. 2024ஆம் ஆண்டு டி20 உலககோப்பை நடைபெறுவதால், இளம் வீரர்களை வைத்து புதிய டி20 அணியை உருவாக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. ஆனால் அதில் கேஎல் ராகுலுக்கு இடமில்லை.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

இதே போன்று, ஒருநாள் போட்டியிலும் கேஎல் ராகுலுக்கு தொடக்க வீரராக இடம் கிடையாது. இதுவரை நீங்கள் செய்த காரியங்களே போதும் என்று பிசிசிஐ முடிவு எடுத்துவிட்டார்கள் போலும். இன்னும் சொல்லப்போனால், டி20 அணியில் ராகுல், ரோகித் இருவருமே இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் ஒருநாள் போட்டிக்கு ரோகித் கேப்டன் என்பதால், அவர் தொடக்க வீரராக இடம்பெறுவார்.

புதிய வீரர்கள்

புதிய வீரர்கள்

மற்றொரு தொடக்க வீரர் இடத்திற்கு ஷிகர் தவான், சுப்மான் கில் ஆகியோர் இருப்பதால், கேஎல் ராகுலுக்கு வேண்டுமானால் நடுவரிசையில் தான் வாய்ப்பு கிடைக்கும். டி20 கிரிக்கெட்டில் கூட ரோகித், ராகுல் ஜோடி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவதால், இந்த ஜோடியை டெஸ்ட் போட்டியில் பிரிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனால் இனி டி20 கிரிக்கெட்டில் புதிய ஜோடியாக இஷான் கிஷன், சுப்மான் கில் ஆகியோர் இருக்க வாய்ப்புள்ளது.

யாருக்கு வாய்ப்பு ?

யாருக்கு வாய்ப்பு ?

பிசிசிஐயின் புதிய தொடக்க ஜோடிக்கான பட்டியலில் இஷான் கிஷன், பிரித்வி ஷா ஜோடியும், சுப்மான் கில் இஷான் கிஷன் ஜோடியும், இஷான் கிஷன் ருத்துராஜ் ஜோடியும் இடம்பெற உள்ளனர். இனி இந்த புதிய ஜோடி தான் அடுத்த சில ஆண்டுகள் டி20 போட்டியில் இடம்பெறும். இதனால் இனி டி20 கிரிக்கெட்டில் ராகுலுக்கு கெட் அவுட் தான்.

Story first published: Sunday, November 13, 2022, 12:43 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+