Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முன்னாள் கேப்டனுக்கே இந்த நிலைமையா? பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கம்? விரைவில் அறிவிப்பு!

மும்பை: இந்திய வீரர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ரஹானே, இஷாந்த் சர்மா மற்றும் சஹா ஆகியோர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வீரர்களின் ஊதியம் ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்.

அதன்படி வரும் டிச.21ம் தேதியன்று பிசிசிஐ நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வீரர்களுக்கான ஒப்பந்தம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

பிசிசிஐ விதிமுறைகள்

பிசிசிஐ விதிமுறைகள்

பிசிசிஐ ஒப்பந்தம் மொத்தமாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரருக்கு ரூ.7 கோடி ஒப்பந்தன் வழங்கப்படும். ஏ பிரிவிற்கு ரூ.5 கோடி ஒப்பந்தமும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஒப்பந்தமும் வழங்கப்படும். கடைசி பிரிவான "சி" ல் இடம்பெறும் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி ஒப்பந்தம் வழங்கப்படும்.

ஏ+ பிரிவு ஒப்பந்தம்

ஏ+ பிரிவு ஒப்பந்தம்

நடப்பு ஆண்டில் ஏ+ ஒப்பந்த பிரிவில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். ஆனால் அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் ஏ+ பிரிவில் கேஎல் ராகுல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. தற்போது குரூப் சி பிரிவில் உள்ள சூர்யகுமார் யாதவ், பி பிரிவுக்கு நகர்த்தப்படுவார். உலகின் நம்பர் 1 டி20 பேட்டராக உள்ளதால் ஏ பிரிவில் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய ஒப்பந்தம்

புதிய ஒப்பந்தம்

அதேபோல ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் சுப்மன் கில் சி பிரிவிலிருந்து பி பிரிவுக்குப் பதவி உயர்வு பெறவுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்து சாதனை படைத்த இஷான் கிஷனுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. டி20 அணியின் கேப்டன் பதவியைப் பெற்ற பாண்டியா, சி-லிருந்து பி பிரிவுக்குப் பதவி உயர்வு பெறவுள்ளார். அதேபோல் தீபக் ஹூடாவுக்கும் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

முக்கிய வீரர்கள் நீக்கம்

முக்கிய வீரர்கள் நீக்கம்

கடந்த வருடம் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்ற ரஹானே, இஷாந்த் சர்மா மற்றும் சஹா ஆகிய வீரர்கள் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஹானே, இஷாந்த் சர்மா, சஹா ஆகியோர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட இருக்கிறார்கள். பிசிசிஐ ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

Story first published: Monday, December 12, 2022, 18:18 [IST]
Other articles published on Dec 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+