Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதை செய்தால் வாய்ப்பு தருகிறோம்”.. ஷமிக்கு பிசிசிஐ போட்ட கட்டளை.. அப்போ ஆஸ்திரேலியா போகலையா??

மும்பை: இந்திய வீரர் முகமது ஷமிக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் வரும் அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படவுள்ளனர்.

பும்ராவின் விலகல்

பும்ராவின் விலகல்

இந்த சூழலில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. காயம் காரணமாக அவர் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மாற்று வீரர்களை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முகமது ஷமி, சிராஜ், ஆவேஷ் கான், உமேஷ் யாதவ், தீபக் சஹார் உள்ளிட்டோர் போட்டியிட்டு வருகின்றனர்.

ஷமி மீது கவனம்

ஷமி மீது கவனம்

இந்நிலையில் ஷமியின் மீது பிசிசிஐ அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. சீனியர் வீரரான அவர் இந்தாண்டில் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் இருந்து விலகினார். இதனால் இவர் எப்படி உலகக்கோப்பைக்கு செல்வார் என ரசிகர்களுக்கு கவலை இருந்தது. ஆனால் அதற்கு பிசிசிஐ ஒரு ஏற்பாடு செதுள்ளது.

ஸ்பெஷல் ஏற்பாடு

ஸ்பெஷல் ஏற்பாடு

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் முகமது ஷமியை விளையாட வைக்க திட்டமிட்டுள்ளனர். பேக் அப் வீரர்கள் உட்பட அனைவருமே ஆஸ்திரேலியாவுக்கு வரும் 6ம் தேதியே புறப்படும் போதிலும், ஷமி மட்டும் இந்தியாவிலேயே இருந்து விளையாடிவிட்டு செல்வார்.

2 பயிற்சி போட்டிகள்

2 பயிற்சி போட்டிகள்

ஒருவேளை இந்த ஒருநாள் போட்டிகளிலும் ஷமி சிறப்பாக செயல்பட்டால், அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் டி20 உலகக்கோப்பைகான பயிற்சி போட்டிகள் உள்ளன. இந்த போட்டிகளில் விளையாடி தனது ஃபார்மை சரி செய்துக்கொள்வார். எனவே ரிஸ்க்கான முடிவை எடுத்துள்ள பிசிசிஐ, அதில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, September 30, 2022, 11:27 [IST]
Other articles published on Sep 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+