Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே ரொம்ப 'ரிச்'சான கிரிக்கெட் 'கோச்'.. நம்ம சாஸ்திரிதான் (விரைவில்)!

டெல்லி: வங்கதேச சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி நிரந்தர பயிற்சியாளரா நியமிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக ஆண்டுக்கு ரூ. 7 கோடி ருபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதற்கு பின், இன்று வரை இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை.

தற்காலிக கோச்

தற்காலிக கோச்

தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். வங்கதேசத் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு நிரந்தர பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

இயக்குநர்

இயக்குநர்

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்களுக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டுமென்பதே விருப்பமாக உள்ளது. எனவே ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. உலக கோப்பை போட்டியின்போது, ரவிசாஸ்திரி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டு இருந்தார். வங்காளதேச தொடரில் அவர் அவரது பதவி மேலும் நீட்டிக்கப்பட்டது.

வங்கதேச டூர் முடிந்ததும்

வங்கதேச டூர் முடிந்ததும்

இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்படுகிறார். வங்காளதேச தொடர் முடிந்த பிறகு அணியின் இயக்குனராக இருக்கும் ரவிசாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்படுகிறார். ஜிம்பாப்வே தொடரில் அவர் பயிற்சியாளராக இருப்பார்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கும் ரவிசாஸ்திரியின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.7 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இதன்மூலம் கிரிக்கெட் உலகின் அதிகம் பணம் சம்பாதிக்கும பயிற்சியாளர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். டெலிவிசன் வர்ணனையாளராக பணியாற்றிய போது கிரிக்கெட் வாரியம் அவருக்கு ரூ.4 கோடி கொடுத்தது. இயக்குனராக நியமிக்கப்பட்ட போது ரூ.6.2 கோடி கொடுக்கப்பட்டது. தற்போது பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Thursday, June 11, 2015, 12:44 [IST]
Other articles published on Jun 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+