கங்குலியை ஓரங்கட்டியது எப்படி? தலைவர் பதவிக்கு வந்தது எப்படி? மௌனத்தை கலைத்த ரோஜர் பின்னி
பெங்களூரு : பிசிசிஐ தலைவர் பதவிக்கு தாம் வந்தது எப்படி என்பது குறித்து ரோஜர் பின்னி முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36 ஆவது தலைவராக ரோஜர் பின்னி கடந்த 18ஆம் தேதி பதவி ஏற்று கொண்டார்.
ரோஜர் பின்னி அந்த இடத்திற்கு அவர் எப்படி வந்தார் , கங்குலி எப்படி நீக்கப்பட்டார் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

கங்குலி பின்னணி
பிசிசிஐ தலைவர் மற்றும் பொருளாளர் பதவி தொடர்ந்து நீடிக்க கங்குலியும் ஜெய்ஷாவும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கான தடையை தகர்த்தெறிந்தனர். அதன் பின்னர் கங்குலி பாஜகவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு கங்குலி மறுப்பு தெரிவிக்க அவர் அந்தப் பதவியில் இருந்து தூக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தூங்கவில்லை
இதனிடையே தாம் தலைவரானது எப்படி என்பது குறித்து ரோஜர் பின்னி பேசி இருக்கிறார். அதில் ஒரு நாள் என்னை பிசிசிஐ பொறுப்புக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ய சொன்னார்கள். நான் ஏதேனும் ஒரு பொறுப்பாக இருக்கும் என முதலில் எண்ணினேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது அது தலைவர் பதவி என்று..
இதை அறிந்தவுடன் அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.
இந்திய கிரிக்கெட்டில் நான் 50 வருடங்களாக வீரர் மற்றும் நிர்வாகி என அனைத்து பொறுப்பிலும் இருந்திருக்கிறேன்.

புதுசு கிடையாது
இதனால் நிர்வாக பொறுப்பு எனக்கு ஒன்றும் புதுசு கிடையாது. பி சி சி ஐ தலைவராக நிறைய சவால்கள் காத்திருக்கிறது. அதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வேன். கிரிக்கெட் வீரராக தாம் திரட்டிய அனுபவத்தை பிசிசிஐ தலைவர் பதவிக்கு பயன்படுத்துவேன். இந்தியா முழுவதும் பல்வேறு இடத்திற்கு நான் சென்று வந்திருக்கிறேன்.

தேவை தெரியும்
ஒவ்வொரு மைதானத்திலும் என்ன தேவை இருக்கிறது என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும்.பிசிசிஐ தலைவராக மூன்று ஆண்டுகளில் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன். எனக்குப் பிறகு வரும் நபர்களுக்கு சுலபமான காரியங்களில் இருக்கும் படி நான் இந்த பதிவை மாற்றி விடுவேன். கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைவது குறித்தும் நான் முக்கிய நடவடிக்கை எடுப்பேன் என்று ரோஜர் பின்னி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications