Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் நாளிலேயே சிக்சர் விளாசிய ரோஜர் பின்னி.. பிசிசிஐ புதிய தலைவர் பும்ராவுக்கு விடுத்த எச்சரிக்கை

மும்பை : பிசிசிஐயின் 36வது தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி பதவியேற்றுள்ளார். பதவியில் அமர்ந்த முதல் நாளிலேயே, சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ-ன் புதிய தலைவர் ரோஜர் பின்னி, பும்ரா காயமடைந்தது குறித்து தான் முதலில் பேசினார். அவர் பேசியது பின் வருமாறு

காயம் அடைவது ஏன்?

காயம் அடைவது ஏன்?

வீரர்கள் அடிக்கடி காயம் அடையவது ஒட்டுமொத்த அணிக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. டி20 உலககோப்பை தொடரில் பும்ராவை வைத்து தான் பல திட்டங்கள் அமைக்கப்பட்டது. தற்போது கடைசி நேரத்தில் அவர் விலகியதால் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பின்னடைவாக ஏற்படுகிறது. இதனால் பிசிசிஐ தலைவராக, வீரர்கள் அடிக்கடி காயம் ஏற்படுவது ஏன், அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

ஓய்வின்றி விளையாட்டு

ஓய்வின்றி விளையாட்டு

அதாவது, வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஓய்வின்றி விளையாடி விட்டு, பின்னர் காயமடைந்துவிடுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் பும்ரா போன்ற முக்கிய வீரர்களை தொடர்ந்து அனைத்து போட்டியிலும் விளையாட வைக்காமல் ஒய்வு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியது.

கண்டுக்கொள்ளாத ஐபிஎல் அணி

கண்டுக்கொள்ளாத ஐபிஎல் அணி

ஆனால், இதனை மும்பை போன்ற அணிகள் கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். இந்தியாவின் முக்கிய வீரர்கள் சிலரை அடையாளப்படுத்தி, அவர்களுக்கு ஐபிஎல் போட்டியின் இடையில் சிறிது ஓய்வு வழங்க வேண்டும். இல்லை எனில் ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அந்த திட்டம் ஆகும்.

ஆடுகளம் சீரமைப்பு

ஆடுகளம் சீரமைப்பு

இதனை வெளிப்படையாகவே உணர்த்தும் விதமாக பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பேசி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதே போன்று ரோஜர் பின்னி, இந்தியாவின் உள்ள ஆடுகளங்களை மேன்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப்போவாக கூறியுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.

Story first published: Wednesday, October 19, 2022, 21:46 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+