பிசிசிஐ கொண்டு வந்த 3.1.1 விதி.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய மாற்றம்.. என்ன நடந்தது?
மும்பை : கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய மாற்றத்தை பிசிசிஐ தற்போது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கொண்டு வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் முதலில் ஷாக் ஆனாலும், பிறகு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு நாடு நடத்தும் உள்ளூர் தொடர்களில் புது புது மாற்றங்கள் கொண்டு வரப்படும். இன்று உலகம் முழுவதும் டி20 போட்டிகள் பிரபலமாக நடைபெற்று வருவதற்கு காரணமே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான்.
முதலில் உள்ளூர் போட்டிகளில் அவர்கள் 20 ஓவர் தொடரை நடத்த, பின்னர் அது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இதே போல் தான் பகல் இரவு டெஸ்ட் போட்டியும்.

புதிய மாற்றங்கள்
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டாசில் நாணயங்களை பயன்படுத்துவதற்கு பதில் பேட்டை பயன்படுத்தி புதிய மாற்றத்தை கொணடு வந்தது. மேலும் இம்பேக்ட் விதி என்று ஒரு பிளேயிரை கொண்டு வரும் விதியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பயன்படுத்தியது. ஆனால் நம்மவர்கள், விளம்பரத்தை எப்படி பெருக்குவது என strategic time out என்ற முறையை கொண்டு வந்தார்கள்.

அபார ஆட்டம்
பல ஆண்டுகளுக்கு பிறகு தான் பிசிசிஐ இந்த இம்பேக்ட் விதியை ஐபிஎல் தொடரில் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், பிசிசிஐ, மற்றவர்களுக்கு முன்னோடியாக ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது தான் விதி 3.1.1.மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் ஆட்டத்தில் மும்பை அணியும், குஜராத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 207 ரன்களை விளாசியது .

டிஆர்எஸ்
இதனை அடுத்து மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் திடீரென டிஆர்எஸ் முடிவை கேட்டார். பொதுவாக ஒரு வீரர் அவுட்டா இல்லையா என்பதை பார்க்கத்தான் இந்த டிஆர்எஸ் முடிவு பயன்படுத்தப்படும். ஆனால் மும்பை அணி இதனை ஓயிடு கொடுத்ததற்கு எதிராக பயன்படுத்தியது. உடனே மூன்றாம் நடுவரும், ரீப்ளேவில் பார்த்து அது அகலப் பந்து இல்லை என அறிவிக்க, கள நடுவர் தனது முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார்.

3.1.1 விதி
இதை பார்த்ததும் ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தது. அப்போது தான் பிசிசிஐயின் இந்த 3.1.1 விதி தெரியவந்தது. அதாவது நோ பால், ஓயிடு என நடுவரின் எந்த தவறான முடிவையும் எதிர்த்து, டிஆர்எஸை பயன்படுத்தலாம். எனினும் கள நடுவர் கொடுத்தது தான் சரி என தெரிய வந்தால் அந்த டிஆர்எஸ் போய்விடும். பிசிசிஐயின் இந்த முடிவு மூலம் நடுவர் தவறாக ஓயிடு வழங்கினாலும், வழங்காவிட்டாலும் கூட, இந்த டிஆர்எஸ்ஸை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications