நீங்க எப்படி ஆர்டர் போடலாம்.. இந்திய வீரர்களிடம் சீண்டல்.. ஆஸி. மீது கடும் கோபத்தில் பிசிசிஐ.. ஷாக்
சிட்னி: இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்று சர்ச்சைக்கு உள்ளாக்கியதாக பிசிசிஐ கோபத்தில் உள்ளது.
ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா விதிகளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனியார் ஹோட்டல் ஒன்றில் உணவு உட்கொண்ட இவர்கள் அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததாக கூறப்படுகிறது. இதுதான் இவர்கள் மீதான நடவடிக்கைக்கு காரணம்.

விசாரணை
இந்திய வீரர்கள் ஐந்து பேர் இப்படி கொரோனா விதிகளை மீறி செயல்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இவர்களால் ஆஸ்திரேலிய வீரர்களின் பாதுகாப்பிற்கு சிக்கல். இதனால் இவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இவர்களை தனியாக பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தியது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பெயரிலேயே இப்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது இப்படி இந்திய வீரர்களை கட்டாயப்படுத்தி ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

சிக்கல்
இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இப்படி தனிமைப்படுத்தியதால் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் எப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

பிசிசிஐ
எங்கள் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் எப்படி ஆர்டர் போடலாம் என்று பிசிசிஐ கோபத்தில் உள்ளது . அதோடு இந்திய வீரர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் விதிகளை மீறவில்லை என்றும் பிசிசிஐ கருதுகிறது. ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மீது கடுமையான கோபத்தில் பிசிசிஐ உள்ளது. இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications