Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் வெளியே செல்ல கூடாது.. கவனமாக இருங்க.. இந்திய வீரர்களுக்கு உத்தரவிட்ட பிசிசிஐ.. பின்னணி

சிட்னி: இந்திய வீரர்கள் யாரும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியே செல்ல கூடாது என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது .

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில் இந்திய வீரர்கள் 5 பேர் கொரோனா விதிகளை மீறி வெளியே சென்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் இருந்து விதிகளை மீறி வெளியே சென்று சுற்றியதாக இவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் உணவகம் சென்று சாப்பிட்டதுதான் இந்த பிரச்னைக்கு காரணம். இவர்கள் ஹோட்டலில் சென்று சாப்பிட்டது மட்டுமின்றி அங்கு ரசிகர்களை கட்டிப்பிடித்ததாக தகவல் வெளியானது.

காரணம்

காரணம்

இதுதான் ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் சர்ச்சையில் சிக்க காரணம். இதனால் இந்த 5 வீரர்களும் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதோடு இந்திய வீரர்கள் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.

மோசம்

மோசம்

இந்த சோதனையில் இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். ஆஸ்திரேலியாவின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கண்டிப்பாக எல்லோரும் மதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.

என்ன

என்ன

இந்த நிலையில் இந்திய வீரர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அவசியம் இன்றி இந்திய வீரர்கள் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல கூடாது. வெளியே உணவு அருந்த, ஷாப்பிங் செய்ய செல்ல கூடாது.

பயோ

பயோ

பயோ பபுள் விதிகளை வீரர்கள் மதிக்க வேண்டும். ஹோட்டல் அறையை விட்டு வெளியே செல்ல கூடாது. முக்கியமாக மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது. வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும், இன்னொருமுறை சர்ச்சையில் சிக்க கூடாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.

Story first published: Tuesday, January 5, 2021, 16:34 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+