Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தான் கடைசி ஐ.பி.எல். ஏலம்… இனிமேல் புதிய முறையை பின்பற்றும் பி.சி.சி.ஐ?

மும்பை :ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களை அணிகள் ஏலம் மூலம் தேர்வு செய்யும்.

Recommended Video

BCCI Plan to cancel IPL Auction in Future | OneIndia Tamil

மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மெகா ஏலமும், ஆண்டுதோறும் சிறிய அளவிலான ஏலமும் நடைபெறும்

இந்த ஏலம் நடத்துவதால் பி.சி.சி.ஐ.க்கு கூடுதல் செலவு மற்றும் பணிகள் எற்படுகிறது.இதனால் பி.சி.சி.ஐ. ஏலம் முறையை கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம வாய்ப்பு

சம வாய்ப்பு

அனைத்து அணிகளுக்கும் செலவு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படுவதால் ஏலத்தில் அனைத்து அணிகளும் வீரர்களை தேர்வு செய்வதில் சம வாய்ப்பு கிடைக்கும். இதனால் அதிக மதிப்புடைய அணிக்கு, திறமையான வீரர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வீரர்களுக்கும் 16 முதல் 18 கோடி வரை தான் அதிகபட்ச ஊதியம் கிடைக்கிறது

கால்பந்து வழியில்..

கால்பந்து வழியில்..

இந்த ஏல முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பல அணிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கு பி.சி.சி.ஐ. ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது. அதன்படி, கால்பந்து அணிகள் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் முறையை ஐ.பி.எல், தொடரிலும் பின்பற்ற பி.சி.சி.ஐ. ஆலோசனை செய்து வருகிறது.

அதிக ஊதியம்

அதிக ஊதியம்

அதன்படி, ஏஜெண்ட்டுகள் மூலம் எந்த அணியில் உள்ள வீரர்களையும், மற்ற அணிகள் அதிகம் ஊதியம் கொடுத்து வாங்க முடியும். அப்படி கிடைக்கும் தொகை அந்த வீரருக்கும், வீரரை விற்கும் அணிக்கும் வழங்கப்படும். இந்த டிராப்ட் முறை ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் பின்பற்றப்படுகிறது. தற்போது ஏலத்திற்கு பதிலாக முழுமையாக டிராப்ட் முறையை பின்பற்ற பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

பாதிப்பு

பாதிப்பு

டிராப்ட் முறை அமல்படுத்தப்பட்டால் அதிக பணம் உள்ள அணிகள் பலமான வீரர்களை தங்கள் அணிக்கு வாங்கிவிடும். இதனால் பஞ்சாப் போன்ற சிறிய அணிகள் பாதிக்கப்படும். இந்த முறை மூலம் வீரர்களின் ஊதியம் கடுமையாக அதிகரிக்கும். பணம் இல்லாத அணிகள், புதுமுக வீரர்களை தயார்படுத்தி களமிறங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படும். அப்படி அந்த இளம் வீரர் தனது திறமையை நிரூபித்துவிட்டால் பெரிய அணிகள் அவர்களை பிடுங்கிவிடும். இதில் சாதகம், பாதகம் நிறைய உள்ளதால் , சில விதிகளை அமல்படுத்திய பின்பே , ஏலம் முறையை பி.சி.சி.ஐ. கைவிடும்.

Story first published: Tuesday, November 30, 2021, 15:31 [IST]
Other articles published on Nov 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+