Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இம்முறையாவது நடைபெறுமா ரஞ்சி கோப்பை- பி.சி.சி.ஐ. சிறப்பு ஏற்பாடு.. வீரர்கள் மகிழ்ச்சி

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் பிரதான உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்க இருந்தது

அப்போது நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 38 அணிகளை வைத்து போட்டி நடத்துவது சிக்கல் என்பதால் போட்டி தள்ளிவைக்கப்பட்டது

இதனால் பல இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கான நஷ்ட ஈடு தற்போது தான் பி.சி.சி.ஐ. வழங்கியுள்ளது.

பி.சி.சி.ஐ. ஏற்பாடு

பி.சி.சி.ஐ. ஏற்பாடு

இந்த நிலையில், கொரோனா எண்ணிக்கை குறையவில்லை என்றாலும், கடந்த முறை போல் அச்சுறுத்தும் வகையில் இல்லை. இதனால் ரஞ்சி கோப்பையை நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ.ஆலோசனையில் ஈடுபட்டது. இதனையடுத்து, கடந்த ஐ.பி.எல். தொடரை போல் இம்முறையும் ரஞ்சி கோப்பையை இரு பகுதியாக நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது

இரண்டு பாதி

இரண்டு பாதி

அதன் படி, பிப்ரவரி பாதியில் தொடங்கி மார்ச் முதல் பாதி வரை போட்டிகளை நடத்துவது என்றும், இரண்டாம் பாதியை ஜூன் மாதம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். தொடருக்கும் தடை இருக்காது,ரஞ்சி கோப்பையையும் நடத்த முடியும் என்று பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது

காரணம்

காரணம்

இது தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் பிசி.சி.ஐ. கருத்து கேட்டுள்ளது. அதன் பிறகு பி.சி.சி.ஐ. ரஞ்சி கோப்பைக்கான அட்டவணையை வெளியிட உள்ளது. இந்திய அணி கடந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடமல் போனதற்கு காரணம், ரஞ்சி கோப்பையை நடத்தாமல் இருந்தது தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி இருந்தால், மேட்ச் பிராக்டிஸ் இருந்திருக்கும். ரஹானே, புஜாரா போன்ற வீரர்களும் தங்களது ஃபார்மை மீட்க ரஞ்சி தொடர் வசதியாக இருந்திருக்கும். மேலும் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக்,, நடராஜன், குல்தீப் போன்ற வீரர்கள் ரஞ்சி கோப்பையில் ஆடி தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமைந்திருக்கும். தற்போது பி.சி.சி.ஐ. மீண்டும் நடத்த உள்ளதால் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Friday, January 28, 2022, 13:35 [IST]
Other articles published on Jan 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+