மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ தற்போது வழங்கி இருக்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 29ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது.
இதில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கம்பீர், இந்திய அணி தலைமை தேர்வு குழு உறுப்பினர் அஜித் அகாதர் மற்றும் மற்ற பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா இங்கிலாந்து தொடர் மற்றும் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் வீரர்களுக்கான ஊதியம் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்திய அணி வீரர்களுக்கு தற்போது நான்கு பிரிவில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏ ப்ளஸ் பிரிவில் 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் 5 கோடி ரூபாயும், பி பிரிவில் மூன்று கோடி ரூபாயும், சீ பிரிவில் ஒரு கோடி ரூபாயும் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது ஏ ப்ளஸ் பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இந்தத் தருணத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால் அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் தான் விளையாடுகிறார்கள். ஒரு நாள் போட்டியில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு இவ்விரு வீரர்களின் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சோபிக்க தவறி வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த மூன்று வீரர்களின் ஊதியத்தையும் குறைக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பும்ரா மட்டும் தொடர்ந்து a+ பிரிவில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது மூன்று பிரிவுகளிலும் விளையாடும் ஜெய்ஸ்வால், கில் ஆகியோருக்கும் ஏ ப்ளஸ் பிரிவில் ஊதியம் வழங்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இதேபோன்று உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை என்ற காரணம் காட்டி ஸ்ரேயா சையத் இஷாந்த் கிஷன் ஆகியோர் இந்திய அணி ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். தற்போது இருவருக்கும் ஊதியம் ஒப்பந்தம் வழங்கப்படும் என தெரிகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஏ பிரிவில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.