Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 சீனியர் வீரர்களுக்கு ஆப்பு.. இனி டெஸ்ட் கிரிக்கெட் அவ்வளவு தான்!!.. முடிவு கட்டிய பிசிசிஐ!

மும்பை: இலங்கை தொடரின் போது 4 இந்திய வீரர்களின் டெஸ்ட் வாழ்கைக்கு முடிவு வைக்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது.

இதனைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.

இலங்கை டெஸ்ட் தொடர்

இலங்கை டெஸ்ட் தொடர்

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட உள்ளது. விராட் கோலிக்கு நிகரான கேப்டனை தேர்வு செய்து வருகிறது.

4 வீரர்களுக்கு ஆப்பு

4 வீரர்களுக்கு ஆப்பு

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான 4 மூத்த வீரர்களை கழட்டிவிட இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பல வருடங்கள் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களாக வலம் வந்த போதும் அவர்களை எந்தவித மறுயோசனையும் இன்றி கழட்டிவிடவுள்ளது.

2 சீனியர்களின் நிலை

2 சீனியர்களின் நிலை

ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் கடந்த சில வருடங்களாகவே ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மல் உள்ளனர். இவர்கள் தற்போது ரஞ்சிக்கோப்பையில் விளையாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் செல்லவுள்ளது.

சாஹாவின் நிலை

சாஹாவின் நிலை

இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருந்து வருகிறார். அவருக்கு காயம் ஏற்பட்டால் கே.எஸ்.பரத் போன்ற இளம் வீரர் உள்ளார். எனவே விருதிமான் சாஹாவுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. நல்ல விக்கெட் கீப்பராக இருந்தாலும், அவர் ரன் குவிக்க திணறுவதே இதற்கு காரணம்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

இதே போல பந்துவீச்சில் அனுபவ வீரரான இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக முழு நேரமாக இனி முகமது சிராஜ் இரங்கவுள்ளார். அவருக்கு மாற்று வீரராக கூட ஆவேஷ் கான் உள்ளிட்டோர் உள்ளனர். எனவே ஃபார்ம் அவுட்டில் இருக்கும் இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்புகள் குறையும் எனத்தெரிகிறது.

Story first published: Friday, February 11, 2022, 13:12 [IST]
Other articles published on Feb 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+