For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 ஸ்டார் வீரர்களுக்கு ஆபத்து.. அதிரடி முடிவை எடுக்கும் பிசிசிஐ.. இங்கி, தொடருக்கு பின் வரும் மாற்றம்

மும்பை: ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கடும் எச்சரிக்கையை கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், இந்த டி20 தொடரில் தான் இந்தியா தனது பலமான ப்ளேயிங் 11 உடன் களமிறங்கவுள்ளது.

முதன்மை தேர்வுகள்

முதன்மை தேர்வுகள்

இந்தியாவின் டாப் ஆர்டரில் முதன்மை தேர்வாக இருப்பது, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் தான். ஆனால் கடந்தாண்டு டி20 உலகக்கோப்பைக்கு பிறகு மூவரும் மிகவும் அறிதாகவே ஒன்று சேர்ந்து ஆடியுள்ளனர். இதில் கே.எல்.ராகுல் ஐபிஎல்-ல் தனது ஃபார்மை நிரூபித்துவிட்ட நிலையில், ரோகித், கோலியின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

அழுத்தம்

அழுத்தம்

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான் என அதிரடி ஓப்பனர்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டிகளில் இஷான் கிஷான் 2 அரைசதம் மற்றும் ருதுராஜ் ஒரு அரைசதம் என விளாசியுள்ளனர். ரோகித், கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் இருக்கையில், இளம் வீரர்களின் வாய்ப்பு கடினமான ஒன்று தான்.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிசிசிஐ அதிரடி முடிவெடுத்துள்ளது. அதாவது நீண்ட நாட்கள் ரோகித், கோலி ஃபார்ம் அவுட்டிலேயே இருக்க முடியாது. இளம் வீரர்கள் அழுத்தம் தருகின்றனர். எனவே இங்கிலாந்து தொடரில் மட்டும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என பிசிசிஐ தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பின்னடைவு

கடும் பின்னடைவு

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல் தொடரில் இருந்தே விலகியுள்ளார். எனவே அவருக்கு இது பெரிய பின்னடைவாக அமையலாம்.

Story first published: Saturday, June 25, 2022, 10:13 [IST]
Other articles published on Jun 25, 2022
English summary
India vs England Series ( இந்தியா vs இங்கிலாந்து தொடர் ) இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் விஷயத்தில் கடுமையான முடிவுகளை எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+