For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி செய்த காரியம்.. வருகிறது வீரர்களுக்கு தடை.. பிசிசிஐ அதிரடி திட்டம்

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட தொடருக்காக அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நேற்று முதல் விரும்ப தகாத விசயங்கள் நடந்து வருகிறது.

Recommended Video

India A Squad அறிவிப்பு! Kuldeep, Ruturaj, Umran-க்கு வாய்ப்பு | Aanee's Appeal | *Cricket

தோனி குறித்து விராட் கோலி போட்ட பதிவு, தற்போது அணியில் ஏதும் சரியில்லை என்பது போல் ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அமைதியாக இருந்த இந்திய அணியில் கோலியின் பதிவு, புயலை ஏற்படுத்திவிட்டது. இதனால், தற்போது அணி சரியில்லையா என்பது போல் கேள்விகளும் வர தொடங்கிவிட்டன.

கோலியின் தவறு

கோலியின் தவறு

போரிலும் சரி, விளையாட்டு களத்தில் சரி, ஒரு எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால் முதலில் நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் ஒரு அணியில் ஒற்றுமை இல்லாத நிலையில, அது எவ்வளவு பெரிய பலமான அணியாக விளங்கினாலும் சரி, வெற்றி கிடைக்காது. அணியில் ஒற்றுமை இலலை என்ற விசயம் வெளியே தெரிந்தால், அது எதிரணிக்கு நாம் கொடுக்கும் பரிசு.

ஒற்றுமை இல்லை

ஒற்றுமை இல்லை

அப்படி பட்ட ஒரு தவறை தான் நேற்று கோலி செய்தார். சில சமயம் மனதில் இருக்கும் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட முடியாது. அதுவும் கோலி போன்ற பொறுப்பு மிக்க நபர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் நேற்று கோலி போட்ட ஒரு பதிவால், இந்திய அணியில் வீரர்களிடையே ஒற்றுமை இல்லை என்பது போன்ற தோற்றம் வெளி உலகத்திற்கு உருவாகி விட்டது.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகி கொண்டு இருந்த இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விராட் கோலி மீது அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் லட்சுமணன் ஆகியோர் செம கடுப்பில் உள்ளனர். விராட் கோலியின் இந்த பொறுப்பற்ற தனத்தால், நன்றாக இருந்த அணியில் விரிசலை உண்டாக்கியுள்ளது. ரோகித் சர்மாவை மறைமுகமாக விராட் கோலி விமர்சித்துவிட்டதாக தான் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

பிசிசிஐ அதிரடி

பிசிசிஐ அதிரடி

இதனையடுத்து, பிசிசிஐ கடுமையான நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் படி, இனி அணியில் நடக்கும் எந்த விசயத்தை குறித்தும் சமூக வலைத்தளத்தில் பதிவோ, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியோ வழங்க கூடாது என்று இந்திய அணியில் உள்ள வீராகளுக்கு பிசிசிஐ தடை விதிக்க உள்ளது. இதனை வெளிப்படையாக சொல்லாமல், வாய்மொழி உத்தரவாக பிசிசிஐ வெளியிடப்பட உள்ளது. இதனை மீறும் வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Friday, August 26, 2022, 21:36 [IST]
Other articles published on Aug 26, 2022
English summary
BCCI plans to impose shawdow ban for Players in social network விராட் கோலி செய்த காரியம்.. வருகிறது வீரர்களுக்கு தடை.. பிசிசிஐ அதிரடி திட்டம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+