Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று கேப்டன்கள்...!! ஜெட் வேக மாற்றங்களுடன் களத்தில் குதிக்கும் பிசிசிஐ

Recommended Video

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட வாய்ப்பு?

மும்பை: இனி வருங்காலங்களில் இந்திய அணிக்கு 3 கேப்டன்களை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் (அரையிறுதி) இந்தியா தோற்றது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது, பிசிசிஐயையும் உலுக்கி விட்டது. அணியின் நிலைமையும் தெரிந்துவிட்டது.

அணியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டிய தருணத்தில் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்வி, வீரர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல கேள்விகளை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடமும், கேப்டன் கோலியிடமும் கேட்கவும் பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது.

முரண்பாடுகள்

முரண்பாடுகள்

ஆனால், அரையிறுதி தோல்விக்கு பின்னர் தான், இந்திய அணிக்குள் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் உள்ளன, அணிக்குள்ளேயே ரோத், கோலி என இரு பிரிவுகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதோடு, பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

2 ஆண்டுகால முடிவுகள்

2 ஆண்டுகால முடிவுகள்

பல தருணங்களில் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் கடந்த 2 ஆண்டுகளில் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர். இந் நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ரோகித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற குரல் இந்திய அணிக்குள் வலுத்து வருகிறது.

ரோகித் புதிய கேப்டன்

ரோகித் புதிய கேப்டன்

2023ம் ஆண்டு உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. இந் நிலையில் ரோகித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் கேப்டன் ஆக்க நினைக்கும் பிசிசிஐ, டெஸ்ட் போட்டி மற்றும் 50 ஓவர், 20 ஓவர் போட்டிக்கு என தனித்தனி கேப்டன் பொறுப்பு இருவருக்கும் கொடுக்கலாம் என்று ஆலோசித்து வருகிறது.

பிசிசிஐ தகவல்

பிசிசிஐ தகவல்

கோலியை டெஸ்ட் கேப்டனாகவும், ரோகித் சர்மாவை ஒரு நாள் போட்டி கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கிரிக்கேட் வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

வருகிறது மாற்றங்கள்

வருகிறது மாற்றங்கள்

ஒரு போட்டி முடிந்தவுடன், எதிர்வரும் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இருப்பது தான் சிறந்தது. எனவே, புதிய மாற்றங்களோடு அடுத்த போட்டிக்கு இந்திய அணி தயாராக வாய்ப்புள்ளது.

இனி 3 கேப்டன்கள்

இனி 3 கேப்டன்கள்

அதற்கான சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. அதாவது ஒரு அணி, 3 கேப்டன்கள் என்ற பார்முலாவை கையில் எடுக்கிறது பிசிசிஐ. 50 ஓவர் போட்டிகளில் ரோகித்தை கேப்டனாக்குவது என்பது அதில் முக்கியமானதாகும்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்த நடவடிக்கைக்கு இது தான் மிகச் சரியான தருணம். அடுத்த உலக கோப்பைக்கு இப்போது இருந்தே திட்டமிடும் வகையில் இந்த மாற்றங்கள் நிகழும். அதிகாரப்பூர்வ அறிவுப்பு விரைவில் வரும் என்று கூறினர்.

Story first published: Tuesday, July 16, 2019, 11:50 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+