Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாயத்துக்கு அழைத்த பி.சி.சி.ஐ.!!. வர மறுக்கும் கோலி, ரோகித்?

மும்பை: வானத்தைப்போல படத்தில் வரும் அண்ணன் தம்பி போல் இருந்த இந்திய கிரிக்கெட் அணி தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் வரும் சகோதரர்கள் போல் மாறிவிட்டனர்.

Recommended Video

Sports minister Anurag Thakur speaks up on rift between Virat Kohli & Rohit Sharma | Oneindia Tamil

டான் ஸ்தானத்தை பிடிக்க சகோதரர்கள் மூவரும் எப்படி அடித்து கொள்வார்களோ, அதே போன்று கேப்டன் பதவியை பிடிக்க கோலி,ரோகித் இடையே கடும் மோதல் நடைபெறுகிறது.

இதனால் இந்திய கிரிக்கெட் அணி இரு துருவங்களாக பிரிந்துவிட்டது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மோதல்

மோதல்

ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.இதனால் தென்னாப்பிரிக்க தொடருக்கு வர மாட்டேன் என்று விராட் கோலி அடம்பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. விராட் கோலியின் செயலால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் என்று கூறி விலகினார்

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதே போன்று ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டேன் என்று அறிவித்திருந்தார். இதனால் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இருவரும் கேப்டன் பதவிக்கு போட்டி போடுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்த விவகாரத்தால் பி.சி.சி.ஐ.க்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பிரச்சினையை தீர்க்க இருவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமாதானப்படுத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. ஆனால், இதற்கு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் முன்வரவில்லை. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பி.சி.சி.ஐ. யோசித்து வருகிறது.

புகார்

புகார்

இதனிடையே தமக்கும், ரோகித் சர்மாவுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், பி.சி.சி.ஐ.யில் இருக்கும் யாரோ சிலர் தான் இது போன்ற தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருவதாக விராட் கோலி புகார் அளித்துள்ளார். தமது நிலையை இன்று நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி தெளிவாக கூறிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, December 15, 2021, 18:28 [IST]
Other articles published on Dec 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+