Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்ரிடியின் புகாருக்கு சரியான பதிலடி.. பிசிசிஐ தலைவர் கொடுத்த நோஸ் கட்.. இனிமே வாய் திறக்க மாட்டாங்க

சென்னை : டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி நடந்து கொள்வதாக சையது ஆப்ரிடி கூறிய குற்றச்சாட்டுக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியைத் தழுவி மற்றும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

ஆப்ரிடியின் புகார்

ஆப்ரிடியின் புகார்

இதனால் இந்திய அணி விளையாடும் ஆட்டத்தில் நடுவர்கள் தவறு செய்வதாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்த ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு ஒரு படி மேல் போய் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சையது ஆப்ரிடி, இந்தியா அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மைதானம் ஈரப்பதமாக இருந்தும் வங்கதேசத்திற்கு எதிராக போட்டியை ஐசிசி நடத்தியதாக விமர்சனம் செய்தார்.

ரோஜர் பின்னி கண்டனம்

ரோஜர் பின்னி கண்டனம்

இதற்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த குற்றச்சாட்டு சரியானது கிடையாது. ஐசிசி எந்த அணிக்கும் சாதகமாக செயல்படுவதாக நான் கருதவில்லை. அனைத்து அணிகளையும் ஒரே மாதிரி தான் ஐசிசி நடத்துவதாக நான் கருதுகிறேன். நீங்கள் சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தக்க பதிலடி

தக்க பதிலடி

மற்ற அணிகளுக்கு கிடைக்காத விஷயம். எங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள். கிரிக்கெட் உலகில் இந்தியா சக்தி வாய்ந்த பெரிய நாடுதான்.ஆனால் நாங்கள் அனைவரையும் சமமாக தான் நடத்துகிறோம் என்று ஆப்ரிடிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்திய அணி பங்கேற்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பிசிசிஐ கையில் கிடையாது

பிசிசிஐ கையில் கிடையாது

அதற்கு பதில் அளித்த ரோஜர் பின்னி, எதுவும் பிசிசிஐ கையில் கிடையாது. அதற்கான அனுமதியை இந்திய அரசுதான் வழங்க வேண்டும். பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு எடுக்கும். அதே போல் மற்ற அணிகள் இங்கு வருவதற்கும் , நாங்கள் மற்ற அணிகள் செல்வதற்கும் அரசு தான் அனுமதி கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக எங்களால் எவ்வித முடிவையும் எடுக்க முடியாது நாங்கள் அரசை நம்பி தான் இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 5, 2022, 13:33 [IST]
Other articles published on Nov 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+