Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட வேண்டாம் - பும்ராவிற்கு கங்குலி ஆலோசனை

டெல்லி : ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க பயிற்சி மேற்கொள்ளுமாறு பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்தியதையடுத்து பும்ரா இதில் கவனம் செலுத்தவுள்ளார்.

குஜராத்தின் லாலாபாய் கான்டிராக்டர் மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் மற்றும் கேரள அணிகளுக்கிடையிலான ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்கவில்லை.

காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியிருந்த நிலையில், கடந்த திங்களன்று அறிவிக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்களில் இணைப்பு

இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்களில் இணைப்பு

கடந்த ஜூலை -ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதையடுத்து காயம் காரணமாக அணியிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியிருந்தார். இந்நிலையில், தற்போது இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் அணியில் இடம்பிடிப்பு

குஜராத் அணியில் இடம்பிடிப்பு

இந்நிலையில், ரஞ்சிக் கோப்பைத் தொடரில் குஜராத் அணியில் விளையாடவிருந்த ஜஸ்பிரீத் பும்ரா, இன்று குஜராத்தின் லாலாபாய் கான்டிராக்டர் மைதானத்தில் துவங்கியுள்ள போட்டியில் பங்கேற்கவில்லை.

பிசிசிஐ தலைவர் அறிவுறுத்தல்

பிசிசிஐ தலைவர் அறிவுறுத்தல்

இதனிடையே, ரஞ்சிக் கோப்பையில் இருந்து விலகி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளுக்கான பயிற்சியை மேற்கொள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பும்ராவிற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

உறுதிப்படுத்திய பிசிசிஐ நிர்வாகம்

உறுதிப்படுத்திய பிசிசிஐ நிர்வாகம்

இந்நிலையில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பெற்றுள்ளதால், அவர் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

காத்திருக்காத ஜஸ்பிரீத் பும்ரா

காத்திருக்காத ஜஸ்பிரீத் பும்ரா

ஜனவரி 14ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மட்டுமே பும்ரா இடம்பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில், முன்னதாக இலங்கை தொடரிலேயே அவரை தேர்வாளர்கள் இடம்பெற செய்துள்ளனர்.

பயிற்சி மேற்கொண்ட பும்ரா

பயிற்சி மேற்கொண்ட பும்ரா

முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது போட்டி நடைபெற்ற விசாகப்பட்டினத்தில் இந்திய அணி மேற்கொண்ட வலைப்பயிற்சியிலும் பும்ரா கலந்து கொண்டு, தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்தார்.

அணியில் இடம்பிடித்த பும்ரா

அணியில் இடம்பிடித்த பும்ரா

இந்த பயிற்சியின்போது பும்ராவின் திறனை சோதித்த பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் அவர் முழுமையான உடல்தகுதியுடன் உள்ளதாக தெரிவித்ததையடுத்து தற்போது இலங்கை தொடரிலேயே பும்ராவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Wednesday, December 25, 2019, 18:45 [IST]
Other articles published on Dec 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+