Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி பதவிக்கே ஆபத்து.. விருதிமான் சாஹா உடைத்த உண்மை.. அதிகார மீறல்கள் செய்தது அம்பலம் - பின்னணி

மும்பை: விருதிமான் சாஹாவின் குற்றச்சாட்டால் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மற்றொரு புதிய தலைவலி உருவாகியுள்ளது.

Recommended Video

Wriddhiman Sahaவை மிரட்டிய Journalist! Dravid, Ganguly சொன்னது என்ன | OneIndia Tamil

விராட் கோலி கேப்டன்சி விவகாரம் மூலம் பெரும் சர்ச்சைகளில் சிக்கிய சவுரவ் கங்குலி தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார், தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறார் என மூத்த அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

பதவிக்கு ஆபத்து

பதவிக்கு ஆபத்து

அதாவது அணித்தேர்வின் போது பிசிசிஐ தலைவர் இருக்கக்கூடாது, அதில் தலையிடக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் ஒவ்வொரு முறையும் தேர்வுக்குழு கூட்டத்திலும் கங்குலி பங்கேற்று வருகிறார். இதற்கான ஆதாரத்துடன் குற்றச்சாட்டு எழுந்ததால் கங்குலியின் பதவிக்கே ஆபத்து எழுந்தது.

புதிய சர்ச்சை என்ன

புதிய சர்ச்சை என்ன

இந்நிலையில் சாஹா புதிய தலைவலி கொடுத்துள்ளார். அதாவது இலங்கை டெஸ்ட் தொடருக்காக தேர்வாகாத சாஹா, நேற்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில், கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 61 ரன்களை எடுத்தேன். அப்போது கங்குலி Whatsapp மூலம் என்னை வாழ்த்தினார். மேலும் அவர் பிசிசிஐ-ல் இருக்கும் வரை எனக்கு வாய்ப்பு இருந்துக்கொண்டே தான் இருக்கும். எந்த கவலையும் படாதே என்றும் தெரிவித்தார்.

கிளம்பிய சந்தேகங்கள்

கிளம்பிய சந்தேகங்கள்

இதில் கங்குலியால் எப்படி ஒரு வீரருக்கு இவ்வளவு உறுதியாக வாய்ப்பு தர முடியும் என கூறுவார் என்பது தான். அப்போது அணித்தேர்வுக்குழு என ஒன்று எதற்கு உள்ளது. அணித்தேர்வில் கங்குலி அதிகார மீறல்களை செய்வது உண்மை தானா என்ற சந்தேகங்களை எழுப்புகிறது.

விரைவில் விசாரணை

விரைவில் விசாரணை

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், பிசிசிஐ தலைவர் ஒரு குறிப்பிட்ட வீரரை தொடர்புகொண்டு ஏன் உத்தரவாதம் தர வேண்டும். இதுபோன்று சொல்வது எவ்வளவு பெரிய தவறு என்று கங்குலிக்கு தெரிந்திருக்காதா? இதுகுறித்து விசாரணை நடத்தி முடிவு காணப்படும் என கூறியுள்ளார். விசாரணையில் உண்மை வெளிவந்தால், கங்குலியின் பதவிக்கே கூட ஆபத்து ஏற்படலாம்

Story first published: Monday, February 21, 2022, 15:28 [IST]
Other articles published on Feb 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+