For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அழுத்தம் கொடுத்து அந்த மெசேஜை போட சொன்னார்கள்.. மறுத்தார் ரோஹித் சர்மா? வெளியான பகீர் தகவல்!

Recommended Video

ரோஹித் சர்மாவுக்கு அழுத்தம் கொடுத்துச்சா பிசிசிஐ

மும்பை : இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவரை வற்புறுத்தி சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட "மெசேஜ்" ஒன்றை பகிருமாறு கேட்டுள்ளனர் சில பிசிசிஐ அதிகரிகள்.

இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. இந்திய அணியில் விரிசல் இருப்பதாக வரும் செய்திகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த தகவல். என்ன தான் நடந்தது?

அய்யய்யோ.. அந்த கேள்வியை கேட்டா மாட்டிக்குவோம்.. மீடியாவை கண்டு தெறித்து ஓடும் கேப்டன் கோலி! அய்யய்யோ.. அந்த கேள்வியை கேட்டா மாட்டிக்குவோம்.. மீடியாவை கண்டு தெறித்து ஓடும் கேப்டன் கோலி!

கோலி - ரோஹித் விரிசல்

கோலி - ரோஹித் விரிசல்

உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே மனக்கசப்பு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது தொடர்பான தகவல்கள் வெளியகி அதிர்ச்சி அளித்தது. பிசிசிஐ அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

பிசிசிஐ அழுத்தம்

பிசிசிஐ அழுத்தம்

இதுவரை நேரடியாக எந்த விசாரணையும் நடத்தாத பிசிசிஐ அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் இது குறித்து விசாரித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூத்த வீரர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்து, "இந்திய அணியில் எல்லாம் சுமூகமாக இருக்கிறது" என சமூக வலைதளத்தில் மெசேஜ் போடுமாறு கூறியுள்ளனர்.

மூத்த வீரர் மறுத்தார்

மூத்த வீரர் மறுத்தார்

அந்த மூத்த வீரர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதுவரை அப்படி எந்த மெசேஜும் பகிரப்படவில்லை. பிசிசிஐ அதிகாரிகள் அழுத்தம் கொடுத்த அந்த மூத்த வீரர் ரோஹித் சர்மா தான் என்கிறார்கள்.

பிசிசிஐக்கு எல்லாம் தெரியும்

பிசிசிஐக்கு எல்லாம் தெரியும்

ரோஹித் சர்மா - விராட் கோலி மோதல் குறித்து பிசிசிஐக்கு அனைத்தும் தெரியும் என கிசுகிசுக்கிறார்கள் சில அதிகாரிகள். ஆனால், ஊடகங்களில் பேசும் சிலர் எல்லாமே கட்டுக்கதை என கூறி வருகிறார்கள். மேலும், விசாரணை நடத்த நேரம் இல்லை என ஒரு மொக்கை காரணத்தை வேறு கூறினார் ஓரி அதிகாரி.

நாடகம் போடுகிறதா?

நாடகம் போடுகிறதா?

துரிதமாக நடவடிக்கை எடுத்து இந்திய அணியை சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பிசிசிஐ, மூத்த வீரர்கள் மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என கூறுகிறார்கள் என அக்கறை கொண்ட அதிகாரிகள்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க இந்திய அணி திங்கள் அன்று அமெரிக்கா கிளம்பிச் செல்ல உள்ளது. அதற்கு முன் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், இப்போது அணியில் நிலவும் இந்த மோதல் குறித்து கேள்வி கேட்கப்படும் என்பதால் அதை தவிர்க்க அவர் பேட்டி கொடுக்க மாட்டார் என்கிறார்கள். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

Story first published: Sunday, July 28, 2019, 9:18 [IST]
Other articles published on Jul 28, 2019
English summary
BCCI pushed a senior player to post “perfectly fine” message says reports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X