ஜஸ்பிரித் பும்ரா விலகியது நல்லது தான்.. கடைசி நேரத்தில் உஷாரான பிசிசிஐ.. உண்மையில் என்ன நடந்தது??
மும்பை: ஜஸ்பிரித் பும்ரா விஷயத்தில் மிகப்பெரிய தவறை செய்யவிருந்த பிசிசிஐ கடைசி நேரத்தில் சுதாரித்துக்கொண்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 13ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா விலகல்
இந்த சமயத்தில் தான் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முன்னணி பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இன்னமும் முழுமையாக சரியாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும், நல்ல விஷயம் என்று தான் கூற வேண்டும்.

எப்படி
காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஆஸ்திரேலிய தொடரின் போது தான் அணிக்கு திரும்பினார். முழு உடற்தகுதி பெறாத போதும், அவர் தயாராகிவிட்டார் என பிசிசிஐ உண்மையை மறைத்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கு சான்று, ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20ல் அவர் விளையாடவில்லை. 2வது டி20ல் 2 ஒவர்கள் வீசி 23 ரன்களும், 3வது போட்டியில் 4 ஓவர்கள் வீசி 50 ரன்களையும் வாரி வழங்கியது தான்.

உண்மை நிலவரம் என்ன
ஓய்வு தேவை என்று நிலையில் இருக்கும் ஒரு வீரரை அவசரமாக தயார்படுத்த நினைத்து பிசிசிஐ டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்தது. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையிலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இதே நிலையில் தான் இருந்தார். ஃபார்மில் இல்லாதவரை ரிஸ்க் எடுத்து அழைத்து சென்று இந்தியா சொதப்பியது.

உஷாரான இந்திய அணி
ஆனால் பும்ராவின் ஃபார்மை பார்த்த பிறகு பிசிசிஐ சுதாரித்துக்கொண்டுள்ளது. அவரை வைத்து ரிஸ்க் எடுத்தால், கடும் விமர்சனங்கள் வரும் என்பதால் முன்கூட்டியே அவர் விலகுவதாக அறிவித்துள்ளது. எனவே பும்ரா விலகியது கூட ஓரளவிற்கு நல்லது தான் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications