Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அப்படியெல்லாம் இல்ல பாஸ்” உலகக்கோப்பை அணி குறித்து ரோகித் தந்த அப்டேட்.. பிசிசிஐ அதிரடியாக மறுப்பு

மும்பை: உலகக்கோப்பை தொடருக்கான அணி குறித்து ரோகித் சர்மா வெளியிட்ட அறிவிப்புக்கு, தேர்வுக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

IND vs PAK போட்டி குறித்து Rohit Sharma தரமான விளக்கம்

இந்திய அணி தற்போது ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது.

அக்டோபரில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை அனைத்து அணிகளும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி பிசிசிஐ தேர்வுக்குழு கூட்டம் செப்டம்பர் 15ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியிருந்தார்.

ரோகித்தின் பதில்

ரோகித்தின் பதில்

அதில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டரை மாதங்களே உள்ளன. அதற்கு முன்பாக ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்கள் உள்ளன. தற்போதே 80 - 90% அளவிற்கு அணி தேர்வு முடிந்துவிட்டது. ஆசிய கோப்பையில் இருக்கும் அணியே தான் பெரும்பாலும் இருக்கும். களத்திற்கு ஏற்றவாறு 3 மாற்றங்கள் மட்டும் வேண்டுமானால் இருக்கலாம் எனக் கூறியிருந்தார்.

அதிகாரியின் விளக்கம்

அதிகாரியின் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து தேர்வுக்குழு அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். அதில், அணி நிர்வாகம் சார்பில் ரோகித் கூறியிருக்கலாம். ஆனால் தேர்வுக்குழு அதிகாரிகளாக அணியில் நிறைய இடங்களில் மாற்றம் ஏற்படும் என நினைக்கிறோம். பும்ரா, ஹர்ஷல் ஆகியோரின் உடல்நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. ஆசிய கோப்பையில் விராட் கோலி விளையாடுவதை வைத்து தான் டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்படுவார். இன்னும் சில இடங்கள் அப்படி உள்ளது என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கான வாய்ப்பு

இளம் வீரர்களுக்கான வாய்ப்பு

ஆஸ்திரேலிய களத்தை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும். ஆசிய கோப்பையில் தேர்வாகியுள்ள ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், உலகக்கோப்பையிலும் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 22, 2022, 18:14 [IST]
Other articles published on Aug 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+