Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2020.. தொடரும் கொரோனா தாக்குதல்... பிசிசிஐ மருத்துவ குழு உறுப்பினருக்கு பாதிப்பு

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில் முதலில் 2 வீரர்கள் உள்ளிட்ட சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

Recommended Video

IPL 2020 Schedule நாளை வெளியீடு: Ganguly அறிவிப்பு | OneIndia Tamil

இந்நிலையில் தற்போது பிசிசிஐயின் மருத்துவ குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCCIs Medical Committee Member Tests Positive For Coronavirus - Report

சிஎஸ்கே வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஜோஷ் ஹாசல்வுட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அதில் பங்கேற்க தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்தால் என்ன நாங்கள் யூஏஇயில் நடத்தி முடிப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளது பிசிசிஐ. பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்து ஒவ்வொன்றாக தீர்த்து ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. ஆயினும் கொரோனாவை எதிர்த்து பிசிசிஐயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடந்த வாரத்தில் எடுக்கப்பட்ட டெஸ்ட்டில் 2 சிஎஸ்கே வீரர்கள் மற்றும் 11 ஊழியர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் அச்சத்துடன் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாசல்வுட் மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிசிசிஐயின் மருத்துவ குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Story first published: Thursday, September 3, 2020, 14:50 [IST]
Other articles published on Sep 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+