Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ-ன் அட்டகாச மூவ்.. உலக ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஜிம்பாப்வே தொடர்.. ஏன் இவ்வளவு முக்கியம்?

மும்பை: இந்தியா - ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended Video

India அணியின் Captain-ஆக KL Rahul பெயர் அறிவிப்பு | IND vs ZIM *Cricket

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனியர் வீரர்கள் அனைவரும் ஆசிய கோப்பைக்கு நேரடியாக வருவதால், இந்தியாவின் பி அணி தான் இந்த தொடரில் களமிறங்குகிறது.

ஜிம்பாவே சுற்றுப்பயணம்

ஜிம்பாவே சுற்றுப்பயணம்

இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஜிம்பாவே அணிக்கு வருமானம் கொடுக்கும் வகையிலான போட்டி என்பதால், இந்தியாவின் இளம் வீரர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொடரின் மீது எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி இருந்தது.

தலைகீழாக மாற்றம்

தலைகீழாக மாற்றம்

இந்நிலையில் திடீரென ஜிம்பாவே தொடர் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது. இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியம் தரும் வகையில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு தரப்பட்டிருந்தது. ஐபிஎல் தொடருக்கு பின் எந்தவொரு போட்டியிலும் ஆடாமல் உள்ள அவரை, ஃபார்ம் தெரியாமல் எப்படி ஆசிய கோப்பையில் சேர்த்தனர் என்ற குழப்பம் உள்ளது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

ஆனால் கே.எல்.ராகுல் திடீரென ஜிம்பாவே தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார். முதலில் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்கிறார். இந்த 3 போட்டிகளிலும் கே.எல்.ராகுலின் பேட்டிங் ஃபார்ம் எப்படி உள்ளது என கவனிக்கப்படவுள்ளது. ஒருவேளை அவர் சொதப்பினால், அவர் நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் மெயின் அணிக்கு கொண்டு வரப்படுவார்.

 மற்றொரு முக்கிய காரணம்

மற்றொரு முக்கிய காரணம்

இதே போல ஆசிய கோப்பை அணியின் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் என இரண்டு அனுபவமில்லாத வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தீபக் சஹார் பேக் அப் வீரராக அறிவிக்கப்பட்டார். சுமார் 6 மாத ஓய்வுக்கு பின் கிரிக்கெட் விளையாடும் தீபக் சஹார் ஜிம்பாவே தொடரில் சிறப்பாக பந்துவீசிவிட்டால், ஆவேஷ் கானுக்கு மாற்றாக தீபக் சஹார் சேர்க்கப்பட்டுவிடுவார். இதனை தேர்வுக்குழு அதிகாரி ஒருவரே உறுதிப்படுத்தியிருந்தார்.

சாத்தியம் உள்ளதா?

சாத்தியம் உள்ளதா?

ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி எந்த மாற்றங்களை வேண்டுமானலும் செய்துக்கொள்ளலாம். அந்தவகையில் தீபக் சஹார், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இந்திய மெயின் அணிக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Story first published: Saturday, August 13, 2022, 10:25 [IST]
Other articles published on Aug 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+