Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BCCI salary contract - புஜாரா சகாப்தம் முடிந்தது.. இந்த 4 சீனியர்களுக்கும் இனி சம்பளம் கிடையாது

BCCI Salary contract : உலகின் மிக பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் அது இந்தியாவில் பிசிசிஐ தான் மற்ற நாட்டு வீரர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கை முழுவதும் சம்பாதிக்கும் பணத்தை பிசிசிஐ ஒரே ஆண்டே வழங்கிவிடும். இதேபோன்று பிசிசிஐ வழங்கும் ஒரு ஆண்டு சம்பளத்தை ஜூனியர் வீரர்கள் ஒரு மாதம் ஐபிஎல் விளையாடினாலே கிடைத்து விடும்.

இதனால் பிசிசிஐ ஒப்பந்தத்திற்கு பலரும் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக இசான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் விளையாடாமல் ஐபிஎல் போட்டிக்காக தயாராகும் பணியில் ஈடுபட்டனர்.

BCCI salary contract 2024 -2025 - cheteshwar Pujara and yuzi chahal are removed from the list


இதனால் கடுப்பான பிசிசிஐ தற்போது இந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மட்டுமல்லாமல் பல சீனியர் வீரர்களும் இந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான புஜாரா தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தன் வாய்ப்புக்காக அவர் போராடி வருகிறார். இந்த நிலையில் கில் அவருடைய இடத்தில் தற்போது நன்றாக விளையாடி வருகிறார். இதனால் புஜாராவுக்கு சம்பளம் வழங்கப்படுவது வீண் என நினைத்த பிசிசிஐ, அவரை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறது.

புஜாரா 3 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் அந்த பட்டியலில் இல்லை. இதேபோன்று ஒரு காலத்தில் இந்திய அணியின் ஸ்டார் தொடக்க வீரராக இருந்த ஷிகர் தவான் தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஷிகர் தவான் ஒரு கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தத்தில் இருந்த நிலையில் தற்போது அவருடைய பெயர் அந்த பட்டியலில் இல்லை.

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் அதிரடியாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியின் ஸ்டார் சுழற் பந்துவீச்சாளரான சாகலும் தற்போது பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ரவி பிஸ்னாய் இடம்பெற்று இருப்பதால் சாகல் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

Story first published: Wednesday, February 28, 2024, 18:49 [IST]
Other articles published on Feb 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+