ஹர்திக் பாண்டியாவுக்கு நடந்த இந்த விஷயம் இனி எந்த ஐபிஎல் கேப்டனுக்கும் நடக்காது.. பிசிசிஐ அதிரடி
மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் இரண்டு கேப்டன்களுக்கு ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்திற்காக ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியாவும் சிக்கி இருக்கிறார். அவரது தடையானது 2025 ஐபிஎல் தொடரில் அமலுக்கு வர உள்ளது. இந்த சிக்கலை போக்குவதற்காக பிசிசிஐ அந்த விதியை நீக்கி இருக்கிறது.
எனவே, ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக தடை பெறும் கடைசி கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் மூன்று போட்டிகளில் ஸ்லோ ஓவர் ரேட் தவறை செய்தனர்.

மூன்று முறை ஒரே அணி ஸ்லோ ஓவர் ரேட் தவறை செய்தால் அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். ரிஷப் பண்ட் தனது தடையை 2024 ஐபிஎல் தொடரிலேயே அனுபவிக்க வேண்டி வந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட் தவறை மூன்றாவது முறையாக செய்தது. அதனால், அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு 2025 ஐபிஎல் தொடரில் மும்பையின் முதல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அந்த முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது. அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட இருக்கிறார்.
இந்த இக்கட்டான நிலை உருவானதை அடுத்து பிசிசிஐ தற்போது அதிரடியாக அந்த விதியை நீக்கி இருக்கிறது. எனவே, இந்த விதியால் தண்டனை பெறும் கடைசி கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். இனி ஐபிஎல் தொடரில் ஒரு அணியோ அல்லது அந்த அணியின் கேப்டனோ ஸ்லோ ஓவர் ரேட் தவறை செய்தால் அதற்காக அந்த அணியின் கேப்டனுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது. அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என தற்போது விதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செய்தி சுருக்கம்
- ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக கேப்டனுக்கு விதிக்கப்படும் ஒரு போட்டித் தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது.
- 2024 ஐபிஎல் தொடரில் மூன்று முறை ஸ்லோ ஓவர் ரேட் தவறு செய்ததால் ஹர்திக் பாண்டியா 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
- ஹர்திக் பாண்டியா தான் இந்த விதியின் கீழ் தடை பெறும் கடைசி கேப்டன் ஆவார்.
- இனி ஸ்லோ ஓவர் ரேட் தவறுக்கு கேப்டனுக்கு தடை விதிக்கப்படாது, அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications