
ஐபிஎல் மீடியா உரிமை
ஐபிஎல் தொடரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியது. ரூ.23,575 கோடிக்கு வாங்கப்பட்டது. இதே போல டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் வியாகாம் 18 நிறுவனம் ரூ. 20,500 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த 2018 - 2022 வரையிலான உரிமம் ரூ.16,347 கோடிக்கு சென்றிருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுக்கு ரூ. 44,075 கோடிக்கு சென்றுள்ளது.

பிசிசிஐ-ன் சலுகை
இப்படி புதிய உச்சத்தை தொடுவதற்கு முக்கிய காரணம், முதலீட்டாளர்களுக்கு பிசிசிஐ கொடுத்துள்ள ஆஃபர்கள் தான் காரணம். அதாவது ஐபிஎல் தொடரின் எண்ணிக்கை இந்தாண்டு 74 போட்டிகளாக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் இதனை 94 போட்டிகளாக உயர்த்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

ஐபிஎல் நாட்கள் அதிகரிப்பு
இந்நிலையில் இதற்காக ஐபிஎல் நடைபெறும் நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தாண்டு 2 மாதங்களாக ஐபிஎல் காலம் இருந்தது. அதனை இரண்டரை மாதங்களாக அதிகரிக்கவுள்ளதாக தெரிகிறது. இதனை பிசிசிஐ செயல் தலைவர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜெய் ஷாவின் விளக்கம்
இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரை இரண்டரை மாதங்களுக்கு நடத்தவுள்ளோம். சர்வதேச வீரர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள். இதற்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐசிசி-ன் அடுத்தாண்டு அட்டவணையின் போது இந்த மாற்றம் நடக்கும் எனகூறியுள்ளார்.

ரசிகர்கள் கோபம்
பிசிசிஐ-ன் இந்த நடவடிக்கையால், சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். ஏற்கனவே ஐபிஎல் தொடரால், சர்வதேச கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதாக விமர்சனங்கள் உள்ளன. தற்போது உள்நாட்டு தொடரை அதிகரித்துவிட்டு, சர்வதேச கிரிக்கெட்டை குறைப்பதா என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications