Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு..! காரணம் அவரே தான்

Recommended Video

IND WI SERIES 2019 | மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தோனியின் ஓய்வு தொடர்பான விஷயமே அதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் தொடரை விட்டு வெளியேறியது. அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

மூன்று டி 20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் 3ல் தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் எம்எஸ்கே பிரசாத் தலைமையில் இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் மும்பையில் இன்று மாலை கூடி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தேர்வு செய்ய இருந்தனர்.

நாளைதான் அறிக்கை?

நாளைதான் அறிக்கை?

ஆனால் காயத்தில் உள்ள வீரகளின் உடற்தகுதி குறித்த அறிக்கை நாளை மாலை தான் வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு குழுவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பங்கேற்க கூடாது என்று உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாக குழு உத்தரவிட்டது.

உண்மையான காரணம்

உண்மையான காரணம்

இந்த காரணங்களால் இன்று நடைபெற இருந்த அணி தேர்வு நாளை அல்லது நாளை மறுநாள் நடை பெறும் என்று தெரியவருகிறது. ஆனால் உண்மையான காரணம் தோனியின் ஓய்வு குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோலி இருக்கிறார்

கோலி இருக்கிறார்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அவர் விளையாடுவர் என்று தெரிய வருகிறது. மேலும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு விவகாரம்

ஓய்வு விவகாரம்

அது மட்டும் இன்றி தோனியின் எதிர்காலம் குறித்தும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதும் இந்திய அணி அறிவிக்கப்படும்போது தெரியவரும். ஆக மொத்தம் தோனியின் ஓய்வு விவகாரம் இப்போது முடிவுக்கு வராது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

Story first published: Friday, July 19, 2019, 12:45 [IST]
Other articles published on Jul 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+