Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உம்ரான் மாலிக்கை இழக்கப் போகிறது இந்தியா ? கவனம் இல்லனா தங்கம் மிஸ் ஆயிடும்..விமர்சகர்கள் எச்சரிக்கை

பெங்களூரு : ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரராக உம்ரான் மாலிக் திகழ்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், தற்போது அவர் சீனிலேயே இல்லை. கடைசியாக அவர் நடந்து முடிந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடினார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பத்து ஓவர் வீசிய உம்ரன் மாலிக் 54 ரன்களை தந்ததோடு 6 நோ-பால்களை வீசியிருந்தார். விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

16 நோ பால்

16 நோ பால்

இரண்டாவது இன்னிங்சில் 15 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் செய்து 62 ரன்கள் விட்டுத்தந்து ஒரு விக்கெட் எடுத்து இருக்கிறார். எடுத்த விக்கெட் நம்பர் 9 பேட்ஸ்மேன். இந்த இரண்டாவது இன்னிங்சில் 10 நோ-பால்களை வீசியதோடு, ஒரு ஓயிடையும் வீசியிருக்கிறார்.இதனால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தவர்கள் எல்லாம் ஏமாற்றம் அடைந்தனர்.

அடிப்படை பிரச்சினை

அடிப்படை பிரச்சினை

எதாவது ஒரு அதிசியம் நிகழ்ந்து அணிக்கு வருவாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இவர் பழைய படி பந்துவீசினாலே அதிசியம் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு வந்துவிட்டார். உம்ரான் மாலிக் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், இவரது பிரச்சனை ஒரு ஆரம்பக்கட்ட வேகப்பந்துவீச்சாளருக்கு இருக்கக்கூடிய அடிப்படைப் பிரச்சினைகள் தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பந்துவீச்சு குறை

பந்துவீச்சு குறை

சரியான லைன் மற்றும் லெங்த்தில் தொடர்ச்சியாக வீசுவது,ஒரே அளவில் கோர்வையாக வீசுவது போன்றவற்றில் தடுமாறுகிறார். மேலும் இவருக்கென ஒரு பந்து வீச்சாளருக்கு சுயமாக இருக்கக்கூடிய யோசனைகள் குறைவாக இருக்கிறது. அயர்லாந்து தொடரில் பந்து வீச்சில் ஒரு கட்டுக்கோப்பு இல்லாது மனம் விரும்பிய திசைகளில் எல்லாம் வீசி இருப்பார்.

கவனம் தேவை

கவனம் தேவை

இந்த இடத்திலேயே இவரை இறுக்கிப் பிடித்து செதுக்க ஒரு நல்ல பயிற்சியாளரும், வழிகாட்டியும் வேண்டும். இல்லையென்றால் தனிப்பட்ட ரீதியாக தன்னம்பிக்கை குறைந்து உம்ரான் மாலிக்கின் கிரிக்கெட் வாழ்க்கையே வீணாக கூடும். இதனால் உம்ரான் மாலிக் உடனடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிய்ல வரவழைக்கப்பட்டு லட்சுமணன் உள்ளிட்டவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லை என்றால் உம்ரான் மாலிக்கை இந்தியா இழக்க நேரிடும்.

Story first published: Wednesday, September 21, 2022, 18:15 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+