Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேற்கு இந்தியத் தீவுகளுடன் இனி நேரடிப் போட்டிகள் கிடையாது - பிசிசிஐ அதிரடி

ஹைதராபாத்: இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை பாதியிலேயே நிறுத்தி விட்டுப் போனதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

அதன்படி மேற்கு இந்தியத் தீவுகளுடன் இரு தரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ. மேலும் அந்த அணிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் அது முடிவு செய்துள்ளது.

ஹைதராபாத்தில் இன்று நடந்த பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

5 போட்டிகள் மிச்சம் வைத்து

5 போட்டிகள் மிச்சம் வைத்து

இந்தியா வந்திருந்த மேற்கு இந்திய தீவுகள் அணி 5 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் மற்றும் ஒரு டுவென்டி 20 போட்டியில் விளையாடவிருந்தது. ஆனால் நான்கு ஒரு நாள் போட்டிகள் முடிந்த நிலையில் ஊருக்குக் கிளம்பிப் போய் விட்டது.

சம்பளப் பிரச்சினை

சம்பளப் பிரச்சினை

வீரர்களின் சம்பளப் பிரச்சினை காரணமாக வீரர்கள் விளையாட மறுத்ததால் தொடரை பாதியிலேயே முடித்தது மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்.

இலங்கையுடன் அவசர டூர்

இலங்கையுடன் அவசர டூர்

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ந்து போன பிசிசிஐ இலங்கை அணிக்கு அவசர அழைப்பு விடுத்தது. அந்த அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது, 5 ஒரு நாள் போட்டிகளில்ஆடுகிறது.

இரு தரப்பு தொடர்களுக்குத்தடை

இரு தரப்பு தொடர்களுக்குத்தடை

இந்த நிலையில் இன்று நடந்த பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தி்ல் இனிமேல் எதிர்காலத்தில், இரு தரப்பு தொடர்களை மேற்கு இந்தியத் தீவுகளுடன் ஆடுவதில்லை என்ற முடிவு எடுக்க்பட்டது. இந்த முடிவை மறு பரிசீலனை செய்வது என்பது அந்த அணி நடந்து கொள்வதைப் பொறுத்து உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

2016 தொடர் நடக்காது

2016 தொடர் நடக்காது

இந்த முடிவு காரணமாக 2016ம் ஆண்டு தொடக்கத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்தியா செல்வதாக இருந்தது. அங்கு 3 டெஸ்ட், ஐந்து ஒரு நாள் போட்டிகள், ஒரு டுவென்டி 20 போட்டியில் விளையாடத் திட்டமிட்டிருந்தது. தற்போது அது நடக்காது என்று தெரிகிறது.

சட்ட நடவடிக்கை

சட்ட நடவடிக்கை

இரு தரப்பு தொடர்களுக்கு தடை தவிர மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Story first published: Tuesday, October 21, 2014, 15:33 [IST]
Other articles published on Oct 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+