Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ மை காட்.. என்னங்க சொல்றீங்க? இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய முறை.. பிசிசிஐ அதிரடி முடிவு

மும்பை: இந்திய கிரிக்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத புதிய முறையை அமல்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான தோல்வியுடன் வெளியேறியதை அடுத்து இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அடுத்த உலகக்கோப்பை தொடருக்குள் இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்து கோப்பையை வெல்ல வேண்டும் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் எடுத்த முதல் விஷயம் கேப்டன்சி தான்.

ஸ்ப்ளிட் கேப்டன்சி

ஸ்ப்ளிட் கேப்டன்சி

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்ட்யாவை புதிய டி20 கேப்டனாக அறிவிக்கவுள்ளனர். 3 வடிவ அணியையும் ஒருவரே சமாளிக்க வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒன்று. எனவே பாண்ட்யா தலைமையில் இளம் படையை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது. அதற்கான முதல் படி தான் நியூசிலாந்து தொடர். ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார்.

தனி பயிற்சியாளர்

தனி பயிற்சியாளர்

இந்நிலையில் பயிற்சியாளரையும் இனி தனித்தனியாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது ராகுல் டிராவிட் மூன்று வடிவ அணியையும் சமாளிக்க வேண்டும் என்பதால், தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இனி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டிற்கு என தனி பயிற்சியாளரை தீர்மானிக்கவுள்ளனர்.

ரோகித் சர்மா சம்மதம்

ரோகித் சர்மா சம்மதம்

இந்திய அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து ஏற்கனவே பிசிசிஐ நிர்வாகம் சார்பில் ரோகித் சர்மாவை அழைத்து பேசிவிட்டனர். அதில் ரோகித் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும், டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுவார் எனவும் தகவல் வெளியானது. இதே போல தற்போது ராகுல் டிராவிட்டையும் அழைத்து பேசவுள்ளனர்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இதன் முதல் படியாக தான் இந்திய அணி தற்போது நியூசிலாந்து தொடரில் விளையாடி வருகிறது. ரோகித், கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதிய இளம் படை களமிறங்கியுள்ளது. ஒருவேளை இது சரியாக அமைந்தால், இந்த தொடர் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Story first published: Saturday, November 19, 2022, 15:52 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+