
ரோகித்தின் நிலைமை
ஆனால் இதில் இந்திய அணி தான் சற்று பலவீனமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் கேப்டன் ரோகித் சர்மா தான். இங்கிலாந்து தொடருக்காக தீவிரமாக தயாரான ரோகித்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த 4 நாட்களாக குவாரண்டைனில் இருந்து வருகிறார்.

இந்திய அணிக்கு பின்னடைவு
ஒரு வேளை ரோகித்தால் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை என்றால் ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் அவரை இந்திய அணி மிஸ் செய்துவிடும். ஏனென்றால் கடந்தாண்டு நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியாவின் அதிக ஸ்கோர் அடித்தவர் ரோகித் சர்மா தான். இங்கிலாந்து களத்தை பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளவர்.

புதிய கண்டம்
இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று இரவு ரோகித் சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் மட்டும் தான், நாளை நடைபெறவுள்ள அணி தேர்வில் பங்கேற்க முடியும். ஒருவேளை பாசிட்டிவ் என முடிவு வந்தால், போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிடுவார்.

உஷாரான பிசிசிஐ
ரோகித் சர்மாவின் இடத்திற்கு மாற்றாக ஏற்கனவே மயங்க் அகர்வாலை இங்கிலாந்துக்கு கொண்டு வந்துள்ளது பிசிசிஐ. இதே போல கே.எஸ்.பரத்-ம் நல்ல ஃபார்மில் இருப்பதால் இவர்கள் இருவரில் யாரோ ஒருவரை ஓப்பனராக களமிறக்க ராகுல் டிராவிட் திட்டமிட்டுள்ளார். அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











