Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மாஸ்" அப்டேட்.. மே.29 "முக்கிய" அறிவிப்பு - ஐபிஎல் ஃபீவர் ஸ்டார்ட்ஸ்

மும்பை: ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் சனிக்கிழமை வெளியாக உள்ளது.

இந்தியாவில் வீசி வரும் கொரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட, பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா உறுதியானது.

பிறகு, சன்ரைசர்ஸ் வீரர் சாஹா, மேலும் சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று கொரோனா அடுத்தடுத்து பரவ மறுதேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ. இன்னும் 31 ஆட்டங்கள் மீதமுள்ளன.

 21 நாளில் போட்டிகள்

21 நாளில் போட்டிகள்

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே நேற்று செய்தி வெளியிட்டது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 போரியா மஜூம்தார்

போரியா மஜூம்தார்

இத்தகவலை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

 SGM மீட்டிங்

SGM மீட்டிங்

இந்த நிலையில், மேலும் பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை ஏபிபி வெளியிட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், இங்கிலாந்து - இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில், செப்டம்பர் 18 அல்லது 19 முதல் ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் சனிக்கிழமை அன்று பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் SGM மீட்டிங் முடிவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 கடுமையான விதிமுறை

கடுமையான விதிமுறை

மேலும், இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் நேரடியாக துபாய் செல்ல இருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களுக்கும் அங்கு வருபவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் மிகவும் கடுமையான விதிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. அபுதாபியில் நடைபெறும் போட்டிகளுக்கு, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைப்பிடிக்கப்பட்ட அதே செயல்முறையைப் பின்பற்றப்படலாம். துபாயில் தங்கியிருக்கும் அணிகள் கோவிட் -19 சோதனைகளை மேற்கொண்ட பின்னர் போட்டிகளில் பங்கேற்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, May 26, 2021, 21:15 [IST]
Other articles published on May 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+