Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"2500" கோடியாச்சே.. சும்மா விட முடியுமா?.. மீண்டும் ஐபிஎல் - "கில்லாடி" பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் 2021 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், அதனை மீண்டும் தொடங்கியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஒருவழியாக வெல்கம் போட்டிருக்கிறது பிசிசிஐ

ஏப்ரல் மாதம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடருக்கு எமனாக வந்தது கொரோனா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டு, பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என கொரோனா பரவ ஆடிப் போனது பிசிசிஐ.

இதனால், மறு தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது. இந்த சூழலில், தான் செப்.19ம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடங்கும் என்ற செய்தி நேற்று வெளியானது. இதன் மூலம், தனது ரூ.2,000 - 2,500 கோடி வருமானத்தை இழக்கும் பேராபத்தில் இருந்து பிசிசிஐ தப்பித்திருக்கிறது.

21 நாள் தொடர்

21 நாள் தொடர்

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே நேற்று செய்தி வெளியிட்டது. மீதமுள்ள 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படுமாம். அதேபோல் 7 single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் டுடே

ஸ்போர்ட்ஸ் டுடே

இதனை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இதன்மூலம், பல கோடி இழப்புகளை பிசிசிஐ தவிர்க்கிறது.

2000 கோடி இழப்பு

2000 கோடி இழப்பு

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், முழு ஐபிஎல் தொடரையும் நடத்தியதில் பிசிசிஐ பார்த்த வருமானம் ரூ.4,000 கோடி. அதவாது, ஒரு போட்டிக்கு சராசரியாக 67 கோடி. அதுவும், ஒரு போட்டியில் கூட பார்வையாளர்கள் இல்லாமல். இந்த ஆண்டும் அதே அளவுக்கான வருமானத்தை பிசிசிஐ எதிர்பார்த்தது. ஆனால், மொத்தமுள்ள 60 போட்டிகளில், 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதனை நடத்தாமல் விட்டால் ரூ.2000 கோடி இழப்பு ஏற்படும் சூழல் உள்ளதாம்.

லோகோ

லோகோ

அதுமட்டுமின்றி, ஐபிஎல் அணிகளின் மற்றொரு கவலை, பல்வேறு நிறுவனங்களுடனான அவர்களின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள். ஒவ்வொரு ஐபிஎல் அணியும், அதன் ஸ்டார் வேல்யூ மற்றும் பாப்புலாரிட்டி அடிப்படையில், தங்கள் அணி ஜெர்சிகளில் நிறுவனங்களின் பெயர்களைக் காண்பிக்க ஸ்பான்சர்களிடமிருந்து பல கோடி ரூபாய்களைப் பெறுகிறது. ஜெர்சி அல்லது வீரர்களின் ஹெல்மெட், பேட் போன்ற இதர பொருட்களில் ஸ்பான்சர் லோகோ எங்கு வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அணிகள் ரூ .40 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.

பாதி குறையலாம்

பாதி குறையலாம்

எட்டு உரிமையாளர்களும் இந்த ஸ்பான்சர்ஷிப்களிலிருந்து ஆண்டுக்கு ரூ .500 கோடி வரை சம்பாதிக்கிறார்கள், இது டிஜிட்டல் உரிமைகள் விற்பனையை மேம்படுத்துவதால் இந்த ஆண்டு சுமார் 600 கோடி ரூபாய் வருமானம் இதன்மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பான்சர்ஷிப்களால் பி.சி.சி.ஐ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. இப்போது 31 போட்டிகளும் நடத்தப்படவில்லை எனில், இந்த வருமானத்தில் பாதி குறையலாம்

இந்த சூழலில் தான், பல நூறு கோடி வருமானத்தை பிசிசிஐ காப்பாற்றும் பட்சத்தில், மீண்டும் ஐபிஎல் தொடங்குகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் அணிகளும் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன.

Story first published: Wednesday, May 26, 2021, 16:55 [IST]
Other articles published on May 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+