Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் 2021 தொடர் துவக்கம்? ஐபிஎல் நிர்வாகக்குழு திட்டம்

டெல்லி : ஐபிஎல் 2021 தொடருக்கான பணிகளை பிசிசிஐ தற்போது முடுக்கி விட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தை அடுத்து இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்படுமா என்பது குறித்து கூடியவிரைவில் பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து தொடரை கருத்தில் கொண்டு ஏப்ரல் 10ம் தேதிக்கு பிறகு ஐபிஎல் 2021 தொடரை பிசிசிஐ திட்டமிடும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2021 ஏலம்

ஐபிஎல் 2021 ஏலம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஐபிஎல் 2020 போட்டிகள் யூஏஇயில் திட்டமிடப்பட்டு சிறப்பான வகையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 11ம் தேதி ஐபிஎல் ஏலம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படுமா?

இந்தியாவில் நடத்தப்படுமா?

முன்னதாக வரும் 20ம் தேதிக்குள் 8 ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட உள்ள வீரர்கள் குறித்த முழுமையான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா அல்லது வெளிநாட்டில் நடத்தப்படுமா என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு

ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு

இதுகுறித்து வரும் 10ம் தேதி துவங்கவுள்ள சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரின் இடையில் முடிவெடுக்கப்படும் என்று பரிஜேஷ் படேல் தலைமையிலான ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் புதிய ஐபிஎல் அணிகளுக்கான டெண்டர்கள் விடப்படும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 28 வரை தொடர்கள்

மார்ச் 28 வரை தொடர்கள்

இதனிடையே, வரும் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடர் மார்ச் 28 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 10க்கு மேல் துவக்கம்

ஏப்ரல் 10க்கு மேல் துவக்கம்

இந்நிலையில் இடையில் வீரர்களுக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டு ஏப்ரல் 10ம் தேதிக்கு மேல் ஐபிஎல் 2021 தொடர் திட்டமிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021ன் அதிகாரப்பூர்வ துவக்கம் மற்றும் இடம் குறித்து ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு பிசிசிஐ இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, January 8, 2021, 13:00 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+