Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா விவகாரம்: ஆண்டர்சனை விடுவித்ததற்கு அதிருப்தி தெரிவித்து பி.சி.சி.ஐ. கடிதம்!

மும்பை: இந்திய அணி வீரர் ஜடேஜாவுடன் மோதிய இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவித்ததற்கு அதிருப்தி தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கடிதம் அனுப்பியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜடேஜாவை ஆண்டர்சன் தள்ளிவிடப் போக பிரச்சனை வெடித்தது. அதேபோல் இந்திய கேப்டன் டோணியையும் ஆண்டர்சன் விமர்சித்திருந்தார்.

BCCI writes to ICC, says 'not happy' with Anderson verdict

இது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தது. பின்னர் நடத்திய விசாரணையில் இருவருமே குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் வாரிய செயலர் சஞ்சய் படேல்,, ஐ.சி.சி. தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. அதைத்தான் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம் என்றார்.

Story first published: Tuesday, August 5, 2014, 17:46 [IST]
Other articles published on Aug 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+