தெறிக்க விட்ட மே.இ. தீவுகள்.. சிதறிப் போன பென் ஸ்டாக்ஸ்!
கொல்கத்தா: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது, கடைசி ஓவரை வீசிய இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் பென் ஸ்டாக்ஸ் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படடுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கூறியுள்ளார்.
ஸ்டாக்ஸ் சிதறிப் போய் விட்டார் என்றும், கடைசி ஓவரில் மேற்கு இந்தியத் தீவுகளின் பிராத்வெயிட் அதிரடியாக முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டியது ஸ்டாக்ஸை அதிர வைத்து விட்டதாகவும் இயான் மார்கன் கூறியுள்ளார்.
நேற்றைய அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்கன் கூறியதிலிருந்து...

சிதறிப் போய்விட்டார்
பென் ஸ்டாக்ஸ் சிதறிப் போய் விட்டார். அவரால் மேற்கு இந்தியத் தீவுகளின் பிராத்வெயிட் ஆடிய ஆட்டத்தை நம்ப முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி விட்டார். இன்னும் 2 நாட்களுக்கு அவரால் நார்மலாக முடியாது.

தோல்வியும் சகஜம்தான்
ஆனால் வெற்றி சகஜம் என்றால் தோல்வியும் சகஜம்தான். அதை நாம் சந்தோஷமாக பகிர்ந்து கொள்வதுபோல வலியையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைத்தான் தற்போது நாங்கள் ஸ்டாக்ஸுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். ஆனால் நாங்கள் எவ்வளவுதான் ஆறுதல் சொன்னாலும் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை.

குரூரமான விளையாட்டு
கிரிக்கெட் குரூரமான விளையாட்டாகவும் இருக்க முடியும். அதுதான்று இன்று நடந்தது. நாங்கள் நன்றாகவே பந்து வீசி வந்தோம். ஒரு கட்டத்தில் நன்றாகவே அவர்களை முடக்கி விட்டோம். ஆனால் அவர்கள் பின்னர் சுதாரித்து விட்டனர்.

எனது வீரர்களால் பெருமைதான்
எனது வீரர்களை நினைத்து நான் பெருமை அடைகிறேன். அனைவருமே திறமையாக பங்காற்றினர். இதை ஆரம்பமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும். நீண்ட நாட்களுக்கு இந்த அணியின் பங்களிப்பை மறக்க முடியாது. அந்த வகையில் இது அருமையான அணி என்பதில் எனக்குப் பெருமைதான் என்றார் மார்கன்.


Click it and Unblock the Notifications