இதை விட வேற என்னங்க வேண்டும்.. ரொம்ப உணர்ச்சிவசப்படறாரே பென் ஸ்டோக்ஸ்
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பணியாற்றுவது கெளரவமானது என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
Recommended Video
வாழ்க்கையில் ஒரு முறை கேப்டனாக இருந்தால் கூட போதும்.. அது நமது வாழ்நாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் போதுமான கெளரவம் என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். ஆனால் தான் இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்த்ததே இல்லை என்றும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே ஜூலை 8ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதில்தான் கேப்டனாக செயல்படவுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

பென் ஸ்டோக்ஸ் கேப்டன்
வழக்கமான கேப்டன் ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு 2வது குழந்தை பிறந்திருப்பதால் அவரால் பங்கேற்க முடியாத நிலை. எனவே பென்ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படவுள்ளார். இதனால் பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதேசமயம், இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

பெரும் கெளரவம்
இன்னும் கேப்டன் மன நிலைக்குள் நான் போகவில்லை. இது சாதாரண விஷயமில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு கேப்டன் என்பது மிகப் பெரிய கெளரவம். ஒரே ஒரு தடவை கேப்டனாக இருந்தாலும் கூட அது நமது வாழ்நாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் பெருமை தரக் கூடியது. போதுமானது. எனவே நான் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட கிடைத்த இந்த வாய்ப்பை இங்கிலாந்துக்கு பெருமை தரக் கூடியதாக மாற்றுவேன் என்றார் அவர்.

ஜோ போட்ட ரூட்டு
ஜோ ரூட் போட்ட வழியில்தான் நானும் பயணிக்கப் போகிறேன். புதிதாக எதையும் எதிர்பார்க்காதீர்கள். அவரால் ஆட முடியவில்லை என்பதால்தான் நான் அவரது ஷூவை அணிகிறேன்.. எனவே அவரது பாணியில்தான் நானும் யோசிப்பேன். அதேசமயம், வெற்றிதான் எங்களது மனதில் இருக்கும். அதற்கேற்ப திட்டமிடுவோம் என்றார் பென் ஸ்டோக்ஸ்.

அதிரடி ஆட்டம்
கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் ஜோ ரூட் தலைமையில் அபாரமாக ஆடி இங்கிலாந்து கோப்பையை வென்றது. அதில் பென் ஸ்டோக்ஸின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது. மேலும் ஜோ ரூட்டுக்கு மிகவும் அட்டகாசமான துணை கேப்டனாகவும் பென் ஸ்டோக்ஸ் செயல்பட்டு வருகிறார். எனவே ஜோ ரூட்டின் இடத்தை அவர் சரியாக நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications