Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாய்ந்து அடித்த ஷமி... பறந்து பிடித்த ஸ்டோக்ஸ்.. அசந்து போன ரசிகர்கள்

டெல்லி: புனே அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற 52வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் 'பேட்டிங்' தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

 Ben Stokes showed brilliant catch

கடைசி ஓவரை உனத்கட் வீசினார். இதன் 5வது பந்தை டெல்லி அணியின் ஷமி தூக்கி அடித்தார். இதனை பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த ஸ்டோக்ஸ் பாய்ந்து தடுத்தார். அப்போது தடுமாறிய ஸ்டோக்ஸ் எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றார். பின் சுதாரித்துக்கொண்டு, அப்படியே பந்தை மீண்டும் மைதானத்துக்குள் தூக்கி எறிந்து, மீண்டும் மைதானத்துக்குள் வந்து அதை அசால்டாக கேட்ச் பிடித்து மிரட்டினார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அதிக கோடிக்கு ஏலம் போன ஒட்டு மொத்த தொகைக்கும் ஒரே கேட்சில் ஒர்த் என புனே வீரர் பென் ஸ்டோக்ஸ் நிரூபித்துள்ளார். நேற்றைய போட்டியில் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு கைகொடுத்து 33 ரன்கள் சேர்த்தார் ஸ்டோக்ஸ்.

Story first published: Saturday, May 13, 2017, 6:12 [IST]
Other articles published on May 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+