Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எதிர்த்து நின்று ஆடுறது தோனிமா" கொண்டாட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.. தெறிக்கும் தோனி மீம்ஸ்!

சென்னை: குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய சிறந்த மீம்ஸை பார்க்கலாம்.

Best Memes from Social Media, After Chennai enters into Finals of IPL 2023 by beating GT in Qualifiers 1

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதுவரை இரு அணிகளும் 4 முறை விளையாடியுள்ள நிலையில், ருதுராஜ் 4 போட்டிகளில் அரைசதம் விளாசியுள்ளார். இதனை திருப்பாச்சி படத்தில் வரும் விஜய் வில்லன் சனியன் சகடையை பார்த்து, "உனக்கு எமன் நான்தான்டா" என்று சொல்லுவார். அதில் விஜய்யாக ருதுராஜை மாற்றி, வில்லனாக குஜராத் பவுலர்களை மாற்றி, "உங்களுக்கு எமன் நான்தான் டா" என்று சொல்வதாக உருவாக்கபட்டுள்ள மீம் வெறித்தனம்.

Best Memes from Social Media, After Chennai enters into Finals of IPL 2023 by beating GT in Qualifiers 1

சிஎஸ்கே அணியை 14 சீசன்களில் 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார் கேப்டன் தோனி. எல்கேஜி படத்தில் நடிகர் மயில்சாமி, "மும்பை கிட்ட ரோகித் சர்மா இருக்காரு.. பும்ரா இருக்காரு.. பொல்லார்ட் இருக்காரு.. அந்த டீம்-க்கு அம்பானி தான் ஓனரு.. ஆனா எதிர்த்து ஆடினவன் பேரு தோனிமா" என்று வசனம் சொல்லுவார். அதனை அப்படியே மாற்றி, "குஜராத் கிட்ட கில், மில்லர், டிவாட்டியா, பாண்டியா, ரஷித் கான் இருக்கலாம். ஏன் சென்னை அணி 3-0 என்று கூட வென்றிருக்கலாம்.. ஆனால் எதிர்த்து நின்று ஆடுனவன் பேரு தோனிமா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் மீம்.

Best Memes from Social Media, After Chennai enters into Finals of IPL 2023 by beating GT in Qualifiers 1

நேற்றையப் போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் 22 ரன்களும், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இதனை, விஐபி படத்தில் இன்னொரு வண்டியில் செல்வதற்காக முயற்சி செய்து வேறு வழியில்லாமல் தனது வண்டியிடம் தனுஷ் மன்னிப்பு கேட்பார். அதுபோல் சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவிடம், "தப்பு தான்.. தல பேட்டிங் பார்க்குறதுக்காக நீ அவுட் ஆகணும்னு வேண்டுனது தப்பு தான்" என்று ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

Best Memes from Social Media, After Chennai enters into Finals of IPL 2023 by beating GT in Qualifiers 1

நேற்றையப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியது. அதுமட்டுமல்லாமல் குஜராத் அணியை முதல்முறையாக ஆல் அவுட் செய்தும் சென்னை அணி அசத்தியது. இதனை பாட்ஷா படத்தில் நக்மாவை திருமணம் செய்ய வரும் ரஜினிக்கு குட்டி வில்லன் கையில் முத்தம் கொடுத்து பெண்ணையும் கொடுப்பார். அதில் வரும் ரஜினியை, தோனியாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

Best Memes from Social Media, After Chennai enters into Finals of IPL 2023 by beating GT in Qualifiers 1

குஜராத் அணிக்கு எதிராக அடைந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, இறுதிப்போட்டிக்கும் சென்னை அணி முன்னேறியுள்ளது. அதனை மாரி படத்தில் வரும் தனுஷாக தோனியையும், வில்லன் விஜய் யேசுதாஸாக ஹர்திக் பாண்டியாவையும் மாற்றி, "ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும் போது ஒரு கொசு வந்து கடிச்சா.. அந்த கொசு பெரிய ஆள் ஆய்டாது.. ஒருநாள் முழிச்சுருக்க சொல்ல கடிக்கும்போது பட்டுனு அடிச்சா, பொட்டுனு போய்டும்.. ஒருநாள்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மெர்சல் ரகம்.

Story first published: Wednesday, May 24, 2023, 8:17 [IST]
Other articles published on May 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+